புதன், 23 அக்டோபர், 2024

'இந்தியா' வேண்டாம் என்றால் ‘பாரத்’ வேண்டவே வேண்டாம்!!!

'பா.ஜ.க.' ஆட்சியில் அனைத்தையும் காவிமயமாக்குகிற போக்கு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. ஏற்கனவே, வந்தே பாரத் ரயில், டி.டி. நியூஸ் தொலைக்காட்சி ஆகியவற்றின் லோகோக்களை மாற்றியதைத் தொடர்ந்து தற்போது, ஒன்றிய பா.ஜ.க. அரசு பி.எஸ்.என்.எல். லோகோவையும் காவி நிறத்திற்கு மாற்றியுள்ளது. அத்துடன், பாதுகாப்பு, மலிவு மற்றும் நம்பகத்தன்மை(security, affordability and reliability) என்னும் வாசகங்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அதேபோல பிஎஸ்என்எல் சின்னத்துடன் கூடிய Connecting India என்னும் வாசகம் Connecting Bharat என்று மாற்றப்பட்டுள்ளது[https://news7tamil.live].

அதாவது, ‘இந்தியா’ இருந்த இடங்களில் எல்லாம் ‘பாரத்’ஐத் திணித்திருக்கிறார்கள்.

[ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ‘கக்கூஸ்’களுக்கெல்லாம் ‘பாரத் கக்கூஸ்’ என்று பெயர் சூட்டலாம்]
நாட்டை ஆளும் ‘பாஜக’ தலைவர்கள் ‘பாரத்’ மீது இத்தனை மோகம் கொண்டது எப்படி?

//துஷ்யந்த மன்னனின் மகன் பரதன் நான்கு திசைகளின் நிலத்தையும் கையகப்படுத்தி, ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி, அஸ்வமேத யாகம் செய்தார். அதனால் அவரது ராஜ்யத்திற்குப் பாரதவர்ஷம் என்று பெயர் வந்தது என்று புராணங்கள் கூறுகின்றன[இது போல இன்னும் சில கதைகள் உள்ளன]//[https://www.bbc.com]

இந்தப் புளுகுப் புராணக் கதையின்படி, இந்தியர்களாகிய நாம் இவன் வழி வந்தவர்களாம். நம் நாட்டை இவன் பெயரில் அழைப்பதே கௌரவம் என்கிறார்கள் இந்துத்துவாக்கள்[நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட ஆங்கிலேயனால் சூட்டப்பட்ட இந்தியா என்னும் பெயர் அவனுக்கு நாம் அடிமையாக இருந்ததை நினைவுபடுத்துகிறதாம்].

நம் கேள்வி:

ஆங்கிலேயனின் ஆதிக்கத்தை நினைவுபடுத்தும் ‘இந்தியா’ என்னும் பெயர் இந்தியர்களை இன்றளவும் இழிவுபடுத்துகிறது என்றால், ‘பாரத்’என்று பெயர் சூட்டுவது தமிழர்களாகிய நம்மை இழிவுபடுத்தும் செயலாகும்[இவர்களின் எண்ணப்படி, இந்தியா முழுவதையும்[பாரதம்] பரதன் ஆண்டான் என்றால், இந்தியாவின் ஓர் அங்கமான தமிழ்நாட்டையும் அவன் அடிமைப்படுத்தி ஆண்டான் என்றாகிறது].

எனவே, நம்மைப் பொருத்தவரை இந்தியா கூடாது என்றால், ‘பாரத்’தும் கூடாதுதான், பரதனுக்கு நாம் அடிமையாக இருந்ததை நினைவுபடுத்துவதால்.

ஆகவே, இந்த இரண்டையும் தவிர்த்து வேறு பொருத்தமான பெயர் சூட்டுவதே ஏற்புடையதாகும்.

அது சாத்தியமே இல்லை என்றால்.....

ஆங்கிலேயன் ஆட்சியில் மிகப் பல நன்மைகளை நாம் பெற்றதால்[என்றுமே இருந்திராத பரதன் பெயரைச் சூட்டாமல்] ‘இந்தியா என்னும் பெயரையே நிரந்தரமாக்குவது அறிவுடைமை ஆகும்.

https://www.bbc.com/tamil/articles/c4n7pgpwvg7o

https://news7tamil.live/bsnl-logo-changed-to-saffron-what-are-the-7-new-features.html


2 கருத்துகள்:

  1. பாரத் கக்கூஸா? உன்னை அந்தக் கக்கூஸில் பத்து நாள் அடைச்சி வெச்சா உன் புத்தி தெளிஞ்சிடும்.

    பதிலளிநீக்கு
  2. பாரத் கக்கூஸ் நாறாது. கம கமன்னு நறுமணம் வீசுமாக்கும்.

    பதிலளிநீக்கு