புதன், 30 செப்டம்பர், 2026

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அது நடக்கும்! அதிகாரம் குவிந்தால்?

 இன்று தாராபுரம் இடைத் தேர்தலுக்கான பரப்புரைக் கூட்டத்திற்கு, அடையாள அட்டை பெற்ற 5000 பேர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும்[10000 பேருக்கு இருக்கை வசதியாம்!?!?!] என்று அறிவித்திருக்கிறார் 2ஆம் புரட்சித் தலைவர் ஜோசப்.

இதனால், கோவை விமான நிலையத்தை வந்தடையும் ஜோசப் பெருமகனார், தாராபுரம் பரப்புரை மேடைக்குச் சென்றுசேரும்வரை, பயணத்திற்கு[82 கிலோ மீட்டர்] எந்தவித இடையூறும் நேராது என்பது 100% உறுதி.

அப்புறம் எதற்கு ஜோசப் வருகையை ஒட்டி, பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடைஞ்சலாகச் சாலை நெடுகப் பேரிகார்டுளும், 144 தடை உத்தரவும், கெடுபிடிகளும், தடைகளும்[ஊடகங்களில் விரிவான தகவல்களை அறியலாம்]?

கோவையிலிருந்து தாராபுரம் பரப்புரை மேடைவரை ஜோசப் ‘ரோடு ஷோ’[சாலை வலம்] நடத்தி, அவரைக் கண்டு களிக்கக் கூமுட்டைகளைக் காசு கொடுத்து வரவழைத்து நெரிசலை உருவாக்கி, அவர்களில் சிலரையேனும் சாகடித்து, வாக்காளர் மத்தியில் தனக்குள்ள செல்வாக்கைப் புதுப்பித்து, இடைத் தேர்தல்களில் வெற்றிக் கனிகள் பறிக்கவா?

‘அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியில் குடை பிடிப்பான்’ என்பது பழைய மொழி[பழமொழி]. ‘அற்பனிடம் அதிகாரம் குவிந்தால் அரசாங்கச் செலவில் அனுதினமும் கொட்டம் அடிப்பான்’ என்பது புதிய மொழி!