பக்கங்கள்https://kadavulinkadavul.blogspot.com/p/blog-page_1.html
செவ்வாய், 17 நவம்பர், 2026
பகிரங்க எச்சரிக்கை[காணொலி] வேண்டாம்; பயனுள்ள நடவடிக்கை தேவை முதல்வரே!
பெரியார் அறிவுலகம் ‘மகா மகா மகா பெரியவாள் ஆன்மிக உலகம்’ ஆகுமா?!
கோவை பெரியார் அறிவுலக நூலகத்திற்குப் புத்தகங்கள் வாங்கியதில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளைச் சுட்டிக்காட்டி, அந்தப் பாவம் நீங்க வேண்டுமென்றால், நூலகத்தில் மகா பெரியவாள்>காஞ்சி சங்கராச்சாரி< புத்தகங்களை[ரா. கணபதி தொகுத்த தெய்வத்தின் குரல் போன்றவை] எடுத்து அத்தனைத் தொகுதிகளையும் ரேக்குகளில் அடுக்கினால்தான், அந்தப் பாவம் போகும் என நான் மனதார நம்புகிறேன்" என்று ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்[ஊடகச் செய்தி].
தமிழை ‘நீச பாஷை’ என்று பழித்தவர்தான் என்றாலும், மக்கள் சாதிமதப் பேதங்களின்றி, சமதர்மம் போற்றி, பாவச் செயல்கள் தவிர்த்து, 100% புண்ணியராக வாழ்ந்திட அருள்பாலித்த மகா பெரியவாவின் நூல்களைப் பெரியார் அறிவுலக நூலகத்தில் சேர்த்தால், செய்த பாவத்திலிருந்து விடுபடலாம் என்று நீதிஅதிபதி சுவாமிநாதனார் கூறியதில் ஒரு திருத்தம்.....
நூல்களைச் சேர்ப்பதால், பாவத்தில் ஒரு பகுதி மட்டுமே நீங்கும். முழுப் பாவமும் நீங்க, ‘பெரியார் அறிவுலகம்’ என்னும் பெயரை அகற்றிவிட்டு, நூலகத்திற்கு, ‘மகா மகா மகா பெரியவாள் ஆன்மிக உலகம்’ என்று பெயர் சூட்டுதல் வேண்டும்.
இதற்கான நடவடிக்கையை ‘தவெக’ அரசு உடனடியாக மேற்கொள்ளும் என்று நம்புகிறோம்.
