செவ்வாய், 17 நவம்பர், 2026

பகிரங்க எச்சரிக்கை[காணொலி] வேண்டாம்; பயனுள்ள நடவடிக்கை தேவை முதல்வரே!


“கட்சிப் பதவியில் இருப்பவர்கள் தவறு செய்தால் பதவி பறிக்கப்படும்” என்று பகிரங்க எச்சரிக்கை விடுத்திருக்கிறீர்கள் ஜோசப்.

ஓசைப்படாமல் தப்புப் பண்ணினவன் மேல் நடவடிக்கை எடுத்தாலே எவனும் அதைச் செய்யமாட்டான்; பகிரங்க எச்சரிக்கை[நீங்கள் நேர்மையானவர் என்று மக்களை நம்பவைக்கும் ஏமாற்று வேலை]யும் தேவைப்படாது.

ஆக்ரோஷத்தின் உச்சியை அடைந்துவிட்டீர்களாமே!

உங்கள் கட்சியைச் சேர்ந்த ச.ம.உறுப்பினர் செய்த அசிங்கச் செயல் பட்டிதொட்டிவரை பரவிக்கிடக்கிறது.

அவரைத் தண்டிக்காமல் நீங்கள் ஆக்ரோஷத்தின் உச்சியிலேயே இருந்துகொண்டிருந்தால், அங்கிருந்து தலைகுப்புற விழவேண்டியிருக்கும்; எழவே முடியாது.

‘தலைவர்[நீங்கள்] காலடி படும் இடமெல்லாம் அதிருது; குலுங்குது’ என்பது போல், கைக்கூலி ஊடகங்கள் செய்தி வெளியிடுவதைத் தடுத்து நிறுத்துவது கௌரவமான பதவி வகிக்கும் உங்களுக்கு நல்லது.

‘வெற்று ஆரவாரம் தவிர்த்து மனப்பூர்வமாய் மக்கள் நலனில் அக்கறை செலுத்துவதே முதல்வரின் கடமை’ என்பதை மறவாதீர்கள் ஜோசப்!
                                                                  =============