வியாழன், 19 நவம்பர், 2026

கடவுளின் 'கலக்கல்' திருவிளையாடல்!!!

காசிப்பூர்-பரௌலி சாலையில், பன்வார்கோல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மிர்சாபாத் மானியா கிராமத்திற்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்ததாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

40 வயதான கமலேஷ் குமார் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளின் மீது குரங்கு குதித்ததால், அவர் வாகனத்தின் மீதான கட்டுப்பாட்டை இழந்தார்; இதனால் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது. அப்போது, ​​பின்னால் வந்த கார் ஒன்று, அவருடன் வந்த அவரது அண்ணன் மகள் சமிக்ஷாவின் மீது ஏறியதில், அவள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாள்.

பலத்த காயமடைந்த கமலேஷை கிராம மக்கள் முகமதுபாத் சமூக சுகாதார மையத்திற்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சுமார் இரண்டு மணி நேரம் கழித்து அவர்[கமலேஷ்] உயிரிழந்தார்// இது செய்தி.

தீராத நோய்களுக்கு உள்ளாக்கியோ, வறுமையில் வாடவிட்டோ, வலிய பிற உயிர்களால் தாக்கவைத்தோ மனித உயிர்களைப் பறிக்கிறார் கடவுள். ஆதிக்க வெறியைத் தூண்டியோ, பகையுணர்வை வளர்த்துத் தங்களுக்குள் மோதவிட்டோ பல்லாயிரவரைத் தனக்குப் பலியாக்கவும் செய்கிறார். இந்தப் படுபாதகச் செயலுக்கு மனிதர்களை விபத்துக்குள்ளாக்கும் தந்திரத்தையும் அவர் கையாள்கிறார்.

அவரால் நிகழ்த்தப்படும் கணக்குவழக்கற்ற விபத்துகளில் மேற்கண்டதும்[படம்] ஒன்று.

மரத்திலிருந்த ஒரு குரங்கு பாய்ந்து தாக்க, ஒரு வாகன ஓட்டியும் அவருடன் பயணித்த ஏதுமறியாத அப்பாவிச் சிறுமியும் உயிரிழந்த பேரதிர்ச்சிச் சம்பவம் நம்மில் எவரும் அறிந்திராத ஒன்று.

மனிதர்களால் அறியப்படாததும் அனுமானிக்கவே இயலாததுமான விபத்துகளின் மூலம், அவர்கள் துடிதுடித்துச் சாவதைக் கண்டு கண்டு மகிழும் தீராத விளையாட்டுக்காரரோ எல்லாம் வல்ல அந்தப் பேரருளாளன் என்று கேட்கத் தோன்றுகிறது.

அவனின்றி அணுவும் அசையாது!

https://www.msn.com/en-in/news/other/out-of-nowhere-monkey-lளன் என்றுeaps-from-tree-onto-biker-s-helmet-in-up-he-and-6-year-old-child-killed/ar-AA2hmtAA?uxmode=ruby&cvid=6af725d0ffb34787bb48203b84928ffb&ocid=edgdhpruby&pc=NMTS&ei=37