அவளுடைய மாமியார் தன் மகன் மணவாளனிடம் விசயத்தைச் சொல்ல, இருவரும் ‘கோகுலம் தாய் சேய் மருத்துவமனை’ என்னும் பிரபலமான தனியார் மருத்துவமனைக்கு விஜயாவை அழைத்துச் செல்வதென்று முடிவெடுத்தார்கள்.
விசயத்தை அறிந்த விஜயா, “நம்ம ஊர் அரசு மருத்துவமனைக்கே போகலாம்” என்றாள்.
“மத்த ஊர் அரசு மருத்துவமனை எப்படியோ, நம்ம ஊர் அரசு மருத்துவமனை ரொம்ப மோசம். அங்கே சேர்க்கப்படும் கர்ப்பிணிப் பெண்கள் உயிர் பிழைப்பதே நிச்சயமில்லை” என்றான் மணவாளன்.
“என் உயிரைப் பத்தி எனக்குக் கவலை இல்லை. நல்லபடியா ஒரு குழந்தையை நான் பெத்துட்டா, நம் முதல்வர் விஜய் நேரில் வந்து நம் குழந்தைக்குத் தங்க மோதிரம் அணிவிச்சி வாழ்த்துச் சொல்லுவார். அது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம். நீங்க என்னை அடிச்சே கொன்னுடுறதா இருந்தாலும், அந்த அதிர்ஷ்டத்தை இழக்க நான் ஒருபோதும் சம்மதிக்கமாட்டேன்” என்றாள் விஜயா அழுத்தம் திருத்தமான குரலில்!
விஜயாவின் புருஷன்காரனும் மாமியார்க்காரியும் நீண்ட நேரம், இருந்த இடத்திலேயே சுயநினைவில்லாமல் நின்றுகொண்டிருந்தார்கள்!
