எனது படம்
மனிதன் விசித்திரமானவன்; விரும்பியது கிடைக்காவிட்டால் விதியை நொந்துகொள்கிறான்; தடங்கல் ஏதுமின்றி கிடைத்துக்கொண்டிருந்தாலோ, “இன்னும் வேண்டும்... இன்னும் வேண்டும்” என்று பித்துப்பிடித்து அலைகிறான். ஆசை ஐயா ஆசை... பேராசை! தடை எதுவும் இல்லாவிட்டாலோ அது அடங்கவே அடங்காது!

சனி, 20 டிசம்பர், 2025

‘காந்தியின் பெயர் இருட்டடிப்பு’... செய்தவர்கள் அவரின் கால் தூசுக்கு ஒப்பாகாத கயவர்கள்!!!

சத்திய நெறி பிறழாமல் வாழ முயன்று, அதில் பெருமளவில் வெற்றியும் பெற்ற உலகின் ஒரே அதிசய மனிதர் காந்தியடிகள்; தமக்குள்ள பலவீனங்களை ஒளிவுமறைவில்லாமல் உலகுக்கு அறிவித்த பெருந்தகை அவர்.

எதிரியை வெல்ல ஆயுதம் ஏந்திப் போராடும் வன்முறைக்கு மாற்றாகத் தம்மைத் தாமே துன்புறுத்திக்கொள்வதன் மூலம், அந்த எதிரியைச் சரணடையச் செய்யும் அகிம்சை நெறியை உலகுக்கு அறிமுகப்படுத்தியவரும் அவரே.

அதனால்தான், இன்றளவும் ஒட்டுமொத்த உலகமும் அவரைப் போற்றுகிறது.

அந்த அதிசய மனிதரின் பெருமைகளையும் சாதனைகளையும் வருங்காலச் சந்ததியினரும் அறிந்து, அவரைப் பின்பற்றத் தூண்டும் வகையில் செயல்பட வேண்டியவர்கள், அதற்கு முரணாக, அவரை நினைவுட்டும் வகையிலான திட்டங்கள், மசோதாக்கள், அமைப்புகள் போன்றவற்றிற்குச் சூட்டப்பட்ட அவரின் பெயரை நீக்கி, புரியாத சமஸ்கிருத & இந்திப் பெயர்களைத் திணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். சில கணங்களேனும் தாமதிக்காமல், இந்த நாட்டைவிட்டே விரட்டியடிப்பதற்கு உரியவர்கள் அந்த அயோக்கியர்கள்.

அகிம்சையின் நாயகனை மறவாமலிருக்கும் மக்கள் அதைச் செய்யாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது வினோதமானது.

இவர்கள் மக்களா, மானம் ரோஷம் எல்லாம் இல்லாத உயிரற்ற வெறும் பிண்டங்களா என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது!