சனி, 26 நவம்பர், 2022

கணவன் கொலையுண்டதைக் கொண்டாடும் 'டிக் டாக்’[Tik Tok] குத்தாட்டக்காரி!!!

க்கள் சமூக ஊடகங்களுக்கு அடிமை ஆகிவருகிறார்கள்[குறிப்பாகச் சில/பல பெண்கள்]. அவற்றில் தங்களின் அந்தரங்க விசயங்களைக்கூடப் பகிர்ந்துகொள்ள அவர்கள் தயங்குவதில்லை.

'Tik Tok’  பலராலும் அறியப்பட்ட ஊடகம்.

அதன் காணொலி ஒன்றில், தன் கணவர் எப்படிக் கொலை செய்யப்பட்டார் என்பதை இளம் பெண்ணொருவர் விவரிப்பதான நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

அந்தக் கொடூர நிகழ்வைக் கண்ணீரும் கம்பலையுமாக, காண்போர் நெஞ்சம் கரைந்து உருகும் வகையில் அவர் சொல்லியிருப்பார் என்றுதானே நினைப்போம்?

அவ்வாறு நாம் நினைப்பது எத்தனை அடிமுட்டாள்தனம் என்பதை  அவரின் அந்த ‘டிக் டாக்’ காணொலி நம்மை உணர வைக்கிறது.

அந்தப் பெண்ணின் பெயர் ஜெசிகா அயர்ஸ்[Ayers].

நடனமாடிக்கொண்டே கணவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதை விவரிக்கிறார்.

முகத்தில் வேதனை பரவ, குரல் தழுதழுக்க அவர் பேசாதது பெரிய குற்றமில்லை. புன்சிரிப்புடன், கொங்கை குலுக்கிக் குத்தாட்டம் போட்டுக்கொண்டே  நடந்த கதையைச் சொல்லுவதுதான் நம்மை அதிர்ச்சியில் உறையச் செய்கிறது.

இந்த வீடியோ ட்விட்டரில் தீயாக பரவியதாம்;  கடும் கண்டனங்களுக்கும் அவர் உள்ளாகியிருக்கிறாராம்.

காணொலிக்கு அவர் தந்துள்ள தலைப்பு: 

‘பாடும் விதவை’[The Singing Widow]

காணொலிப் பெண் நம் கண்ணுக்குப் ‘பாடும் விதவை’யாகத் தெரியவில்லை. பார்வையாளரைக் கவர அவர் ஆடும் கவர்ச்சி நடனம் வேறு ‘எதையெல்லாமோ’ எதிர்பார்க்கிறாரோ என்றுதான் எண்ணத் தூண்டுகிறது!

கலிகாலம்டா சாமி!!


***** காணொலி சரிவர இயங்காததால் பதிவு செய்யப்பட்ட அதன் முகவரி நீக்கப்பட்டது.
=========================================================================