//வெற்றியைத் தீர்மானிக்கும் சமூகங்கள்: இத்தத் தொகுதியில்[திருநெல்வேலி] நாடார் சமூகத்தினர் பங்கு 25% என்பதால், அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையே பல்வேறு கட்சிகளும் வேட்பாளர்களாகக் களமிறக்கப்பட்டுள்ளனர்.
பட்டியலினச் சமூகத்தினர் 18% இருக்கும் நிலையில் அவர்களின் வாக்குகளும் மிகுந்த முக்கியத்துவம் கொண்டவை. முக்குலத்தோர், வெள்ளாளர்கள், யாதவர்கள் போன்றோரும் கணிசமான எண்ணிக்கையில் இங்கு உள்ளனர்.//
-மேற்கண்டது இன்றைய[22.03.2018] 'தமிழ் இந்து' நாளிதழ்ச் செய்தியாகும்.
இந்த இதழ் என்றில்லை, வேறு பிற நாளிதழ்களும்கூட, கட்சிகளின் வெற்றி - தோல்வியைக் கணிக்கும்போது, தொகுதியில் இடம்பெற்றுள்ள சாதிகளைப் பட்டியலிடுகின்றன.
எந்தவொரு சாதியையும் 'சாதி' என்று குறிப்பிடாமல், 'சமூகம்' என்றே பதிவு செய்கின்றன.
நமக்குள்ள சந்தேகம் என்னவென்றால்.....
சமூகம் என்று குறிப்பிடுவதால், பிறப்பில் வேறுபாடு இல்லை என்பதை மறந்து, நான் இந்தச் சாதியைச் சார்ந்தவன் என்று கருதும், அல்லது சொல்லிக்கொள்ளும் இழிதகைமை அகன்றுவிடுமா?
எதன்பொருட்டு இந்தப் பத்திரிகைகள் சாதியைச் சமூகம் ஆக்குகின்றன?
துணிந்து, சாதிகளைச் சாதிப் பெயருடனேயே பட்டியலிடுவதுதான் பத்திரிகைகளின் கடமையாகும். இன்னும் ஒரு படி மேலே சென்று.....
இத்தொகுதியில் இன்ன இன்ன சாதியைச் சார்ந்த மூடர்கள்[சாதிப்பற்று உள்ளவர்களை வேறு என்ன பெயரில் சுட்டுவது?] இடம்பெற்றுள்ளார்கள் என்று எழுதினால் அவ்வாறு எழுதும் பத்திரிகைகளை 'முற்போக்கு இதழ்கள்'' என்று பாராட்டலாம்.
===================================================================================
அது தான் அரசியல்! இங்கே சாதி இல்லை சாதி இல்லை என்று சொல்லிச் சொல்லியே சாதியை வளர்க்கிறார்கள் அரசியல் வாதிகள், ஊடகங்கள் என அனைவருமே...
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி வெங்கட்
நீக்கு