பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 21 மார்ச், 2019

பேய்களை நம்பாத ஊர் மக்களுக்கு ஓர் உபதேசம்!

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே ஒரு கிராமம்..

இங்கு, சிமெண்டு ஓடு போர்த்த ஏழு விவசாயிகளுக்குச் சொந்தமான வீடுகளின் மீது இரவு நேரத்த்இல் கற்கள் விழும் ஓசை கேட்டது.

வீட்டுக்காரர்களுடன் ஊர் மக்களும் திரண்டு சுற்றுவட்டாரம் முழுக்கத் தேடியதில், கற்கள் வீசியதாகச் சந்தேகப்படும் மனிதர்கள் எவரையும் கண்டுபிடிக்க இயலவில்லை.

பின்னர், பகல் நேரத்திலும் இதே மாதிரிச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பந்தப்பட்டவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

சிவகிரி காவல்துறை ஆய்வாளரை அணுகி, மர்ம நிகழ்வு குறித்து புகார் செய்ததோடு, தங்களுக்குப் பாதுகாப்புத் தர வேண்டும் என்று விண்ணப்பம் செய்திருக்கிறார்களாம்.

கும்பல் சேர்ந்து சாதிக்க முடியாத காரியத்தை நாலு போலீஸ்காரங்க வந்து சாதிக்க முடியுமா?

கல்லெறிவது மனுசங்க வேலை அல்ல; பேய் பிசாசுகளின் கைங்கரியம்தான் என்பதை இந்த மக்கள் புரிஞ்சுக்கத் தவறிட்டாங்க. அதுகளின் கொட்டத்தை அடக்கச் சில வழிமுறைகள்.....

கோயில் கோயிலாகப் போய் உண்டியல்களில் கட்டுக்கட்டா பணத்தையும் தங்க நகைகளையும் போடலாம்.

சாமிகளுக்குச் சிறப்பு அர்ச்சனைகள் அபிஷேகங்கள் செய்யலாம்.

ஒட்டுமொத்த ஊர் மக்களையும் பீடித்திருக்கும் பொல்லாத தோஷத்தைப் போக்க வேத விற்பன்னர்களக் கொண்டு மகா மகா பெரிய யாகங்கள் நடத்தலாம்.

கில்லாடி மாந்திரவாதிகளை வரவழைத்து மாந்திரீகம் பண்ண வைக்கலாம்.

வி.ஐ.பி. ஜோதிடர்களை அணுகி செலவைப் பொருட்படுத்தாமல் பரிகார பூஜைகளும் யாகங்களும் நடத்தலாம்.

இவற்றில் ஏதாவது ஒன்றையோ அனைத்தையுமோ நிறைவேற்றினால் ஊரில் முகாமிட்டிருக்கும் அத்தனை பேய்களும் பிசாசுகளும் காணாமல் போகும்; கல்லெறிதலும் நடவாது.



6 கருத்துகள்: