பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 19 மார்ச், 2019

மாவலி மரத்தில் அம்மன் முகம்!!!

கீழே உள்ள நகல் படிவத்தில் இடம்பெற்றிருப்பது அண்மைச் செய்தி[தினத்தந்தி, 17.03.2018].

நாமக்கல்லிலிருந்து துறையூர் போற வழியில்  ஒரு கிராமம்[பேரு வேண்டாம்.படை திரட்டிட்டு உதைக்க வருவாங்க]. அங்கே ஓர் அதிசயம் நிகழ்ந்திருக்கு. அது பேரதிசயமாக்கும். 

ஊர்ப் பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்தில் இருக்கிற 'மாவலி' மரத்தில்  அம்மன் முகம் போல ஒரு வடிவம் இருந்ததை ஊர் மக்கள் பார்த்திருக்காங்க. போல என்ன போல, அது அம்மனின் முகமேதான்னு[முகத்தைக் காணலையேன்னு தேட வேண்டாம். அது மரத்துக்குள்ளே மறைஞ்சிருக்கு] அவங்க முடிவு பண்ணினாங்க. ''இது கருப்பண்ணசாமி கண்ணு''...''ஐயனாரப்பன் கண்ணு'' சொல்லி யாரும் பிரச்சினை பண்ணல.

நெத்தியில் சந்தனப்பட்டை போட்டு, குங்குமம் வெச்சி அம்மன் முகத்தை அழகுபடுத்தினாங்க; ஆட்டம் பாட்டம்னு ஊரே சந்தோசத்தில் மூழ்கிடிச்சி.

இப்படி, ஒரு மரத்துக்குள்ள ஒளிஞ்சிருந்து அம்மன் சாமி முகம் காட்டினது எனக்கு உலக அதிசயமா பட்டுத்துடூடனே புறப்பட்டு அந்தக் கிராமத்துக்குப் போனேன். நான் போனபோது மரத்தைச் சுத்தி ஜே ஜேன்னு மக்கள் கூட்டம்.

உத்து உத்துப் பார்த்தேன். கண் மாதிரியான வடிவம் மட்டும் தெரிஞ்சிது[மரங்களின் கிளை பெயர்ந்த கணுக்களில் இப்படியான உருவங்கள் தெரியறது உண்டு] 

கூடியிருந்த மக்களை ஒரு தடவை நோட்டம் விட்டுட்டு, சாதுவாகத் தெரிந்த ஒரு பெரியவரிடம், ''அம்மன் முகம் உங்க கண்ணுக்குத் தெரியுதா''ன்னேன்.

''ஆகா, நல்லாத் தெருதே''ன்னாரு அவரு.

''எனக்குத் தெரியலையே''ன்னேன் கிசுகிசுப்பான குரலில்.

பெரியவர் என் முகத்தைச் சில வினாடிகள் கூர்ந்து பார்த்துவிட்டுச் சொன்னார்: ''அது வந்து தம்பி, மரத்தில் தெரியறது அம்மன் கண்தானான்னு கேள்வியெல்லாம் கேட்டா அம்மன் கோபப்படுவா. பக்தி நிறைஞ்ச மனசோட பார்த்தா அம்மன் முகம் உன் கண்ணுக்குத் தெரியும்''னாரு.

பக்திமானாகவும் இல்லாம பகுத்தறிவாளனாகவும் இல்லாம, ரெண்டுங்கெட்டானா இருந்த நான் இப்போ கோயில் கோயிலா அலைய ஆரம்பிச்சுட்டேன். 

ஆறு மாசம் கழிச்சி மாவலி மரத்தில் அம்மன் முகம் தெரியுதான்ன்னு போய்ப் பார்க்கணும்!










2 கருத்துகள்: