'பிரமிக்க வைக்கும் உண்டியல் அதிசயங்கள் திருப்பதியில் மட்டுமே சாத்தியம்' என்கிறது பக்தி நெறி பரப்பும் தமிழ்ப் பருவ இதழ் ஒன்று.
காலியாக வைக்கப்படும் அதி பிரமாண்ட உண்டியல் ஒரே நாளில் நிறைந்துவிடுகிறதாம்.
வேறு உண்டியல் வைத்து அதுவும்கூட நிரம்பிவிடக்கூடும்.
நேர்ந்துகொள்ளும்போதே உண்டியலில் பணமோ நகையோ போடுபவர்கள் உண்டு. கோரிக்கை நிறைவேறிய பிறகு காணிக்கை செலுத்துவோரும் உண்டு. இரண்டில் எது முன்னிலை வகிக்கிறது என்பதை நாம் அறியோம்.
எது எப்படியோ.....
தனக்கான உண்டியலை நாள்தோறும் நிரப்பிவிடுகிறார் ஏழுமலையான். உலகெங்கும் ஆயிரக்கணக்கில் கடவுள்கள் தத்தம் பக்தர்களுக்கு அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இது ஏன் சாத்தியப்படவில்லை?
ஏன்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக