27.06.2019 இல் ஒரு நாளிதழில் வெளியான, ஒரு வாசகியின் கேள்விக்கான பதில் இது.
விரல் நுனியில் லட்சுமி; உள்ளங்கையில் சரஸ்வதி; மணிக்கட்டில் பார்வதி எனப்படும் பெண் தெய்வங்கள் தங்கியிருக்காங்களாம். எந்த மகான் இதையெல்லாம் கண்டுபிடித்துச் சொன்னார்? புருடா விடுகிற புண்ணியவானே, சொல்லுவீரா?
மனிதர்களின் மூக்கு நுனியில் முருகப் பெருமானும், காது மடலில் யானைக் காது கொண்ட பிள்ளையாரும், நெற்றிப் பொட்டில் மகாவிட்ணுவும், கழுத்துக் குழியில் பிரம்மதேவனும், கால் பாதங்களில் அனைத்துக்கும் மூலகாரணமானவனான சிவபெருமானும் தங்கியிருக்கிறார்கள் என்று பழைய புராணம் ஒன்று சொல்வதாக நான் சொல்கிறேன். மறுக்க முடியுமா உம்மால்?
உம்மைப் போன்றவர்கள்ஆயிரக் கணக்கில் பொய்க் கதைகளைப் பரப்பித்தான் மக்களை அடிமடையர்கள் ஆக்கியிருக்கிறார்கள். இந்த அறிவியல் யுகத்திலும் இவ்வாறான புனைகதைகளை நீங்கள் பரப்புரை செய்வதன் உள்நோக்கம்தான் என்ன?
மக்கள் மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபட்டுவிடக் கூடாது என்பதுதானே?
போலி ஆன்மிகம் பேசிப் பிழைப்பு நடத்துவதுதானே?
பாவிகளா, இனியேனும் திருந்துங்கள்; மக்களிடமிருந்து விலகிச் செல்லுங்கள். அவர்கள் சுதந்திரமாகச் சிந்திக்கட்டும்; மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபடட்டும்.
=======================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக