திரு.GMB[பதிவர்] அவர்களின் 'கடவுள்' குறித்த ஒரு பதிவு[http://gmbat1649.blogspot.com/]க்கு நான் எழுதிய பின்னூட்டம்[கருத்துரை], தனிப்பதிவாக வெளியிடுதற்கு ஏற்புடையது என்பதால் அதை இங்கு பதிவு செய்கிறேன்.
எந்தவொரு அளவுகோலுக்கும் கட்டுப்படாத பிரபஞ்சம்[கோள்கள், நட்சத்திரங்கள், உயிர்கள் என்று எதையெதையோ உள்ளடக்கியது] இயங்கிக்கொண்டிருக்கிறது என்பது மட்டுமே மனித அறிவால் அறியப்பட்டுள்ளது.
இந்தப் பிரபஞ்சத்தின் தோற்றம் எப்போது தொடங்கியது? தோன்றவெல்லாம் இல்லை; எப்போதும் இருந்துகொண்டே[இயங்கிக்கொண்டே] இருக்கிறது என்றால் அது எப்படிச் சாத்தியமாயிற்று?
இதன் தோற்றம், அல்லது இருந்துகொண்டே இருப்பது எதற்காக?
இனி எப்போதும் இதற்கு அழிவே இல்லையா?
இந்தப் பிரபஞ்சத்திலுள்ள பூமியில் உயிர்கள் தோன்றுவதும் வாழ்வதும் அழிவதுமாக இருப்பது ஏன்?
இப்படி, இன்னும் பல விடை தெரியாத கேள்விகளுக்கிடையே, கடவுள் என்று ஒருவரைக் கற்பித்து, அவர் அளப்பரிய ஆற்றலும் கருணையும் கொண்டவர் என்றெல்லாம் கொண்டாடுவது அறியாமையின் உச்சம்.
அடுக்கடுக்கான துன்பங்களை எதிர்கொள்ள இயலாத நிலையில், மரணத்திற்குப் பின்னர் என்ன என்பது புரியாமல் மயங்கும் மனிதர்களுக்குக் கடவுள் தேவைப்படுகிறார் என்பது மட்டுமே உண்மை.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக