இவை செல்வந்தர் வீட்டில் வளரும் கொழுகொழு நாய்களல்ல; ஒரு வேளை உணவுக்கே வழியில்லாமல் போவோர் வருவுவோர் பின்னே வாலாட்டிக் குழையும் தெரு நாய்கள். அவ்வப்போது கண்ட கண்ட பேர்வழிகளிடம் கல்லடி வாங்கும் பாவப்பட்ட ஜீவன்கள்.
'கிளு கிளு' கன்னியரை வர்ணித்துக் கவிதை எழுதாத கவிஞர்களே இல்லை. இந்தத் தெரு நாய்களைப் பற்றி யாரேனும் கவிதை படைத்திருக்கிறார்களா?
காசாவயல் கண்ணன் எழுதிய, 'நடைபாதை நண்பர்கள்' என்னும் தலைப்பிலான ஒரு கவிதையை['காமதேனு'30 ஜூன் 2019] வார இதழில் வாசித்து மனம் நெகிழ்ந்தேன். உங்களுக்காக இங்கு பதிவு செய்கிறேன்.
விருப்பப் பெயரெல்லாம் இருக்காது.
தெருநாய் என்ற பொதுப்பெயர்
மட்டும்தான் அவற்றுக்கு.
பல நாள் கழித்துப் பார்த்த
பால்ய நண்பனைப் போல்
வாஞ்சை காட்டும் ஒரு நாய்.
முன்னாள் காதலியாய்
ஓரக்கண்ணால் பார்த்து
ஒதுங்கிப்போகும் மற்றொரு நாய்.
தாயிடம் முட்டி முட்டிப்
பால் குடித்த ஞாபகத்தில்
என் கால் விரல்களை
விருட் விருட்டென்று
சப்பும் குட்டிநாய்.
நாய்கள் இல்லாத
வீதிகள் இல்லை.
நாய்கள் இல்லாத வீதிகள்
வீதிகளே அல்ல#
==================================================================================
நன்றி: காசாவயல் கண்ணன்
நன்றி: 'காமதேனு' வார இதழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக