எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

சனி, 31 மே, 2025

ஆளுநன் என்னும் ‘அரை லூசன்’க்கு எதற்குத் திருக்குறள் ஆராய்ச்சி!?!?!

ல்லாத ‘ஆன்மா’வைப் பற்றியும் அதனுடன் தொடர்புடைய கடவுள் குறித்தும் கதையளப்பதுதான் ஆன்மிகம்.

இதன் பெயரால் மக்கள் மனங்களில் திணிக்கப்பட்ட மூடநம்பிக்கைகளுக்கு அளவே இல்லை.

அவற்றிலிருந்து விடுபட்டு வாழ்வாங்கு வாழ்வதற்குத் தேவையான சிந்திக்கும் அறிவைத் தூண்டுவதே திருக்குறள் என்னும் உலகம் போற்றும் திறனாய்வு நூல்.

அடிக்கல் நாட்ட வந்த ஆளுநன் ஆர்.என்.ரவி திருக்குறள் ‘முக்தி’ பற்றிப் பேசுகிறது என்றும், ஆன்மிகத்திலிருந்து திருக்குறளைப் பிரிக்க முடியாது என்றும் பேசியிருப்பது அடாவடித்தனம்; கடும் கண்டனத்திற்குரியதும் ஆகும். 

மனம்போன போக்கில் உளறிக்கொட்டுவதை வழக்கமாக்கிக்கொண்டுள்ள இந்த நபர்[தமிழ் தெரியாது], தன் தாய்மொழியான பீகாரியில் உள்ள, சனாதனம் போற்றும் ஆன்மிக நூல்கள் பற்றிக் கதையளக்கலாம். எவரும் கண்டுகொள்ளமாட்டார்கள்.

இனியும் திருக்குறள் போன்ற அரிய நூல்கள் குறித்து, சனாதனிகள்கள் எழுதிக்கொடுப்பதை மேடையேறி ஒப்பித்துத் தமிழர்களின் வெறுப்புக்கு ஆளாக வேண்டாம் என்பது இந்த ஆளுக்கான நம் அறிவுறுத்தல்.

விவாதத்திற்குரிய கருத்துகள்[கடவுள், மறுபிறப்பு> சம்பந்தப்பட்டவை] வெகு அரிதாக இடம்பெற்றிருந்தாலும், திருக்குறள் ஆன்மிக நூல் அல்ல; உலக அறிஞர்களால் போற்றப்படும் ஆகச் சிறந்த வாழ்வியல் நூல் என்பதே உண்மை.