வெள்ளி, 8 மே, 2026

அறிவுமணியான ஜோதிமணி[காங்கிரஸ்] கொஞ்சம் சிந்திப்பாரா?

‘அதிமுக’வும் ‘திமுக’வும் இணைந்து ஆட்சியமைக்க உள்ளதாக உலவும் வதந்தியைக் கருத்தில்கொண்டு, “எதிரியின் எதிரி நண்பன்; எதிரியும் எதிரியும் நண்பர்கள் ஆவது எப்படி?” என்று பக்கா காங்கிரஸ்காரி[ரர்?] ஆன ஜோதிமணி[காங்கிரஸ் கட்சியில் நடுநிலை உணர்வுடன் செயல்படுகிற ஒரே ஒரு புத்திசாலி]  அசத்தலான ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறார்.

கேள்வி கேட்பதற்கு முன்பு கொஞ்சம் யோசித்திருந்தால்.....

‘எதிரிகளான இருவரையும் அழிக்க மூன்றாவதான ஒரு பொது எதிரி உருவாகும்போது இவர்கள் இருவரும்[எதிரியும் எதிரியும்] இணைவதைத் தவிர வேறு வழியில்லை’ என்பது அறிவுமணியான ஜோதிமணிக்குப் புரிந்திருக்கும்.

புரிந்துகொண்டிருந்தால் முன்வைத்த கேள்வியைத் திருப்பப் பெறுவார் என்று நம்புகிறோம்.