[!!!‘ஒரு தரமான பதிவும்[Quora] பகிர்வும்’ என்னும் தலைப்பில் ஏற்கனவே வெளியான பதிவு, தற்செயலாக நேர்ந்த பிழை காரணமாக அழிந்துவிட்டது{delete ஆன இடுகையை, சற்று முன்னர் முயற்சி செய்ததில் மீட்டெடுப்பது சாத்தியமானது என்பதைத் தெரிவிக்கிறேன். வரைவில்-draft-இல் உள்ளது}. வருகையாளர் நலன் கருதி, அதே உள்ளடக்கத்துடன், இப்பதிவு[’நீட்’ தேர்வு... நன்மை தீமைகள்] வெளியிடப்படுகிறது].
நன்மைகள்:
*கல்லூரியில் சேர குறைந்தபட்ச மதிப்பெண் தேவை. முழுமையாகப் பணத்தைக் கொண்டு சேர முடியாது
*15% AIQ (all india quota) - மதிப்பெண் இருந்தால் இந்தியாவின் எந்த மாநிலத்திலும் படிக்கலாம்.
*நீட் மற்ற அரசுத் தேர்வுகள் போல் இருப்பதால் பின்னாளில் பயன்படலாம்.
*பாடங்கள் — ஒரே தேர்வு ஒரே தாள்.
*விண்ணப்பிப்பது எளிது. பள்ளி பொதுத் தேர்வுக்கு தனியாக விண்ணப்பித்து தேர்வு எழுதுவதைத் காட்டிலும்.
*மதிப்பெண்ணுக்காக மனப்பாடம் செய்து வெற்றி பெற இயலாது . வேதியியல் , இயற்பியல் இரண்டிலும் புரிதல் வேண்டும்.
*கணினி மூலம் தேர்வுத்தாள் திருத்தப்பட்டு வந்தால் MCQ கேள்விகளுக்கான பதில் சரி/ தவறு இரண்டுதான் . 1 மதிப்பெண் கூடத் திருத்துபவரைப் பொருத்து மாறாது .
தீமைகள்:
*பயிற்சி நிறுவனங்கள் கொள்ளை அடித்தல்.
*பயிற்சி வகுப்பின்றி வெற்றி பெற முடியாது என்று மாணவர்கள் நினைத்தல்.
*பள்ளித் தேர்வுகளைப் பெரிதாகக் கண்டுகொள்ளாமல் நீட்டில் மட்டும் கவனம் செலுத்துதல்.
*மாணவர்களின் பயம். பெற்றோர்களின் கவலை.
*இதற்காக 1–3 ஆண்டுகள் படித்துப் பின் தேர்வெழுதி, கல்லூரியில் சேர்ந்தால் படிப்பு முடியத் தாமதம் ஆகும் .
*****‘மாநில அரசுகளின் அதிகாரம் பறிக்கப்படுதல்’ -இதையும் சேர்த்துக்கொள்ளலாம் என்பது ‘பசி’பரமசிவத்தின் தனிப்பட்ட விருப்பம்.
* * * * *
நன்றி: காவியஸ்ரீ சண்முகம்