அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 2 நவம்பர், 2020

'அது'க்குத் தோதான நேரமும் சூழலும்!!!


*இரவில், இருள் சூழ்ந்த சூழலில் 'அதை' வைத்துக்கொள்வதே சரி என்கிறதாம் சாஸ்திரம்; 'பகலில் வைத்துக்கொள்வது பாவம் என்றும் சொல்கிறதாம்[அது எந்தச் சாஸ்திரமோ தெரியவில்லை!]. 

*பெண்களுக்கும் இந்த நேரம்தான் பிடிக்குமாம்![இந்தக் காலத்து நவநாகரிகப் பெண்களுக்குமா?!] 

*பகல் நேரத்தில் வைத்துக்கொண்டால் உடலில் சூடு அதிகரித்து[குளிர்சாதன வசதி உள்ள அறையிலுமா?!] 'அது' நீர்த்துப்போதல், முந்துதல் உள்ளிட்ட பிரச்சினைகள் வர வாய்ப்பு இருப்பதால் முழுமையாக இன்பம் அனுபவிக்க முடியாது.

*இவற்றை அடிப்படையாகக்கொண்டே குளிர்ச்சியான சூழல் உள்ள இரவில்[குளிர்காலத்தில் பகலும் குளிர்ச்சியாகத்தானே இருக்கும்?!] மேற்கொள்வதே நல்லது என்கிறார்கள் அனுபவசாலிகளான நம் முன்னோர்கள்.

*உறக்கத்திற்குப் பிறகுதான் ரத்த ஓட்டத்தில் உயிர்க்காற்று[ஆக்ஸிஜன்] அதிகம் கலந்திருக்கும் என்பதால், பின்னிரவு 4 மணிக்கு மேல் காலை 6 மணிக்குள் 'அதை' வைத்துக் கொள்வது ஏதுவான சூழலாகும்[சுகமான தூக்க நேரம் அல்லவோ?!] என்கிறார்கள். 

*இரவில் எத்தனை முறை வைத்துக்கொண்டாலும் ஆழ்ந்த உறக்கம் வந்துவிடும்[பகலிலும் உறக்கம் வருமே. வேலைக்குப் போய்ச் சம்பாதிக்க வேண்டாமா?!] என்பதால், இதன்மூலம் உடலுறுப்புகளுக்குத் தேவையான அளவு ஆக்சிஜனேற்ற ரத்த ஓட்டம் கிடைத்துவிடுமாம். 

*அதுவே பகல் நேரமாக இருந்தால் உடல் சோர்வடைவதுடன் வேறு சில உடல் உபாதைகளையும் ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது என்று உறுதிபடச் சொல்கிறார்கள்.

*சாப்பிட்டதும் 'அதை' வைத்துக்கொண்டால் மூலக்கோளாறுகள் வர வாய்ப்பு உள்ளதாம்[ரொம்பவே பயமுறுத்தறாங்களோ?!].

*இரவோ, பகலோ எந்த நேரத்தில் 'அதை' வைத்துக்கொள்ள வேண்டுமென்றாலும் துணையின் சம்மதமில்லாமல் அது நடக்கக்கூடாது[இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை!]. ஆகவே, மனைவியாக இருந்தாலும் அவரது ஆசாபாசங்களுக்கு மதிப்பளித்து நடந்துகொள்வதே நல்லது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிறார்கள் பெரியவர்கள்.

*இது விசயத்தில், பெண்களைவிட ஆண்களே முதலில் தயாராகின்றனர். நேரம், காலம் பார்ப்பதில் அவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை[அவசரக்காரர்கள்] என்று கவலைப்படவும் செய்கிறார்கள்.

*மேற்சொன்னவற்றையெல்லாம் ஆராய்ச்சியாளர்களும் மருத்துவர்களும்கூட வலியுறுத்துகிறார்களாம். 

அந்த 'அது' எதுங்க?

ஹுக்கும்...நான் சொல்லித்தான் தெரியணுமாக்கும்!

முக்கியக் குறிப்பு: 'மணமான ஆண், பெண் அனைவரும்... குறிப்பாக, இளசுகள், மேற்கண்ட அனுபவ உரைகளை அடிமனதில் ஆழமாகப் பதிவு செய்து பின்பற்றுவது மிக மிக மிக அவசியம்!' என்று நல்ல அனுபவசாலிகளான நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்!

===============================================================

உதவி: http://tamilnews.cc/news/news/104115 [01 Nov,2020]