'அனல் காற்று வீசுவதோ, குளிர்க் காற்று வீசுவதோ கொரோனா தொற்றுப் பரவலில் எந்தவொரு தாக்கத்தையும் உண்டுபண்ணாது. அதாவது, குளிர் காலம், வெப்பம் மிகுந்த காலம் என்று எந்தவொரு காலச் சூழலும் கொரோனா கொடுந்தொற்று பரவுவதற்குக் காரணமாக அமையாது.
தொற்றுப் பரவலுக்கு, மக்கள் முகக் கவசம் அணியாமல் இருப்பது, சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் இருப்பது போன்றவையே முக்கியக் காரணங்கள் ஆகும். தட்பவெப்ப நிலை என்பது இறுதிக் காரணியாகவே இருக்கக்கூடும்.'
இந்த ஆய்வு, சுற்றுச்சூழலில் நிலவும் தட்பவெப்ப நிலையைக் கருத்தில்கொண்டு நிகழ்த்தப்பட்டது.
கடந்த மார்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரை உலகம் முழுதும் பல்வேறு பகுதிகளில் கொரோனா பரவிய விதம் ஆய்வாளர்களின் கவனத்தில் கொள்ளப்பட்டது.
கொரோனா பரவலில் வெப்பநிலை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது. ஏற்படுத்தினாலும், அது 3% அளவில் மிகவும் குறைவாகவே இருக்கும் என்பது இந்த ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டது.
இதுவரை, குறிப்பிட்டதொரு வெப்பநிலை கொரோனா பரவலுக்குச் சாதகமாகவோ பாதகமாகவோ இருந்திருக்கவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது['சர்வதேசச் சுற்றுச் சூழல் ஆராய்ச்சி மற்றும் பொது நலன்' இதழில் இந்த ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது].
எனவே,
குளிர் காலத்தையோ, மழைக் காலத்தையோ எண்ணி மனம் கலங்காமல், வழக்கமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முழுக் கவனம் செலுத்துமாறு ஆராய்ச்சியாளர்கள் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
===============================================================
dinamani.com[03.11.2020] செய்தியை அடிப்படையாகக் கொண்டு இப்பதிவு எழுதப்பட்டது[தினமணி நகல் எடுப்பதை அனுமதிப்பதில்லை].
நன்றி: dinamani.com