(பிரம்மாவானவர் மனுஸ்மிருதி சாஸ்திரத்தை உண்டு பண்ணி விதிப்படி பிருகு ரிஷிக்கு முன்னம் ஓதுவித்தார் ; பிருகு ரிஷியும் மரீசி முதலான ரிஷிகளுக்கு ஓதுவித்தார். (மனு அத் 1 சு58)
மனுஸ்மிருதியை (வருணாசிரம தர்மமாகிய வைதீகத் தர்மத்தை)விளக்கி, பிருகு ரிஷி மற்றுமுள்ள ரிஷிகளுக்குச் சொன்னார்.)
*அதுபோலவே பிரம்மா மறுபடியும் தொடையைப் பார்க்க மேலும், இந்திரியம் ஸ்கலிதமாயிற்று. அதை விருட்சபச்சை முதலிய அநேக செடிகளில்விட வால்கில்லியாதி முதலிய அநேக ரிஷிகள் பிறந்தார்கள்.
*அவ்விடம் விட்டுப்போகும்போது ஒரு சுடலைச் சாம்பலில் இந்திரியத்தை விட அதில் பூரிச்சிரவனென்கிற இராட்சசன் பிறந்தான்.
*அவ்விடத்திலுள்ள எலும்புகளைப் பொறுக்கி ஒன்றாய்ச் சேர்த்து அதிலே இந்திரியத்தை விட சல்லியன் என்ற பராக்கிரமசாலி பிறந்தான்.
*அவ்விடம் விட்டுபோகையில், சிறிது இந்திரியம் ஸ்கலிதமாகிக் கீழே விழ அதை ஒரு பட்சி புசித்து அதன் வயிற்றில் சகுனி பிறந்தான்.
*பிறகு தடாகத்தில் கொஞ்சம் இந்திரியம் விட அதை மண்டூகம் (தவளை) புசித்து அதன் வயிற்றில் மண்டோதரியென்கிற பெண் பிறந்தாள்.
*மிகுந்த இந்திரியத்தைக் குளத்தில் தாமரைப் பூவில் விட அதில் பத்மை என்கின்ற புத்திரி பிறந்தாள்
*அந்தத் தன் புத்திரியான பத்மையின் அழகைக் கண்டு மோகித்து, பிரம்மன் அவளைப் புணர விரும்ப, அவள் சம்மதிக்க மறுக்க அவளுக்குச் சமாதானமாக வேத வாக்கியத்தைச் சொன்னார் பிரம்மா:
“மாதரமுபைத்ய கஸாரமுபைதி, புத்ரார்தீத
சகாமார்த்தி நாபத்திரலோகா நாஸ்தீத,
ஸர்வம்பரவோ விந்துஹஃ, தஸ்மாத் புத்ரார்த்தம்
மாதரம், ஸீரஞ்சதி , ரோஹதி.”
இதன் பொருள்- புத்திரார்த்த நிமித்தம் , தாய்,தமக்கை, மகள்,
பிள்ளை யாரோடாயினும் கூடலாம் என்பதாகும்.
*பின் காம விகாரத்தினால் இந்திரன் உத்திரவுப்படி திலோத்தமை 4 திசையிலும் ஆடியதால் பிரம்மாவுக்கு 4 தலையும் உயரப் பறந்து ஆடி 5 ஆவது தலையும் ஆட, மோகங்கொண்டு திலோத்தமையைத் தொடர்ந்து போகையில் ஈஸ்வரன் ஒரு தலையை அறுத்து எறிந்தான்.
*பின் பிரம்மன் காடுகளில் அலைந்து திரிகையில் ஒரு புதரிலிருந்த பெண் கரடியைக் கண்டு அதைக் கூடி அதன் வயிற்றில் கரடி முகத்தோடு ஓர் புத்திரன்[ஜம்புவந்தன்] பிறந்தான்.
*பின் ஊர்வசி என்பவளிடம் சில உடன்படிக்கை செய்து, முன் பத்மையிடத்தில் ஆக்குஷணஞ் செய்த அண்டத்திலுள்ள இந்திரியத்தை ஊர்வசி கர்ப்பத்தில் விட, அதில் வசிஷ்டன் பிறந்தான், அப்புத்திரனுக்குத் தன் பதவியைக் கொடுத்து பிரம்மா தபோவனமடைந்தார்.
* கலைக்கோட்டு ரிஷி – மானுக்கும்
கவுசிகர் – குயத்திக்கும்
ஜம்பகர் – நரிக்கும்
வால்மீகி – வேடனுக்கும்
அகஸ்தியர் – குடத்திலும்
வியாசர் – செம்படத்திலும்
வசிஷ்டர் – ஊர்வசிக்கும்
காதனசல்லியர் – விதவைக்கும்
மாண்டவியர் – தவளைக்கும்
காங்கேயர் – கழுதைக்கும்
சவுனகர் – நாய்க்கும்
கணாதர் – கோட்டானுக்கும்
கர் – கிளிக்கும்
ஜாம்புவந்தர் – கரடிக்கும்
அஸ்வத்தாமன் – குதிரைக்கும் பிறந்தனராம்.
=================================================================================================