பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 25 மார்ச், 2019

நாட்டுக்குத் தேவை நடமாடும் சாமிகள்!

திருவண்ணாமலை மாவட்டம் கொரக்கோட்டையில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பிரம்மாண்டப் பெருமாள் சிலை, பெங்களூரு ஈஜிபுரா எனுமிடத்தில் பீடத்துடன் இணைத்து 108 அடி உயரத்தில் நிறுவத் திட்டமிடப்பட்டது. இதற்காக 64  அடி உயரம், 24 அடி அகலம் கொண்ட பெருமாள் சிலை ராட்சத லாரியில் பயணிக்கத் தொடங்கி நான்கு மாதங்கள் ஆகிவிட்டன.

வழியில் பல்வேறு தடைகள் காரணமாக அதன் பயணம் இடைவெளிவிட்டு விட்டுத் தொடர்ந்த நிலையில்.....

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சாமல்பள்ளத்தில் இச்சிலை  சுமார் 2 மாதமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

தென்பெண்ணை ஆற்றில் தற்காலிகப் பாலம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. அது முடிந்தவுடன் சிலையின் பயணம் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெருமாள் சிலையின் இந்தப் பயணத்திற்காக நிறையப் பணமும் மனித உழைப்பும் செலவழிக்கப்பட்டுள்ளன எனினும், இதன் மூலம் பக்தியுள்ளம் கொண்ட பல்லாயிரக்கணக்கான கிராமப்புற ஏழை மக்கள் பெரும் பயன் அடைந்துள்ளார்கள் என்பது மறுக்க இயலாத உண்மை. அதாவது.....

நடமாடும் மருத்துவமனைகள், நடமாடும் வணிக வாகனங்கள், நடமாடும் உணவுக்கூடங்கள் போல நடமாடும் சாமிகளும் இந்நாட்டுக்குத் தேவை!

பெருமாளை வழிபட்டுப் பாவம் போக்கிப் புண்ணியம் சேர்ப்பதற்காக, திருப்பதி, திருவரங்கம் என்றெல்லாம் நிறையப் பணம் செலவழித்து நெடும்பயணம் மேற்கொள்வது தவிர்க்கப்பட்டது.

இதைக் கருத்தில்கொண்டு சிந்திக்கும்போது, கருணைக்கடலான பெருமாளை[கோதண்டராமர்] ஒரு நடமாடும் கடவுளாகவே ஆக்கி, நாட்டில் ஏழை மக்கள் வாழும் கிராமங்களில் நடமாடவிடுவது அவர்களுக்குச் செய்யும் ஆகச் சிறந்த தொண்டாக அமைந்திடும் என்பது அடியேனின் தாழ்மையான கருத்தாகும். 

இந்த எளியேனின் அடிமனதில் இவ்வெண்ணம் உருவாவதற்கு, நாட்டில் நடமாடும் மருத்துவமனைகள், நடமாடும் வணிக வாகனங்கள், நடமாடும் உணவுக்கூடங்கள் போன்றவை தூண்டுதலாக அமைந்தன எனலாம்.

இது சாத்தியமானால், காலப்போக்கில் பல்வேறு மதம் சார்ந்த சாமிகளும் ஊர்தோறும் பயணித்து ஏழை எளிய மக்களுக்கு அருள்பாலித்திட வாய்ப்பு அமையும் என்பது திண்ணம்.
கோதண்டராமர் சிலை க்கான பட முடிவுகோதண்டராமர் சிலை க்கான பட முடிவுகோதண்டராமர் சிலை க்கான பட முடிவுகோதண்டராமர் சிலை க்கான பட முடிவு





4 கருத்துகள்: