ஆவி அடிக்குமா? அடிக்கும்!... கடிக்குமா? கடிக்கும்!... இறுக்கிக் கட்டிப்பிடிச்சிட்டுக் கூரிய பற்களால் குரல்வளையைக் கீறிக் குருதி குடிக்குமா? குடிக்கும்!
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நடைபெற்ற, மானாமதுரைத் தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் ஹெச்.ராஜாவுக்கான அறிமுகக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் பாஸ்கர் அவர்கள் ஆற்றிய உரையில்.....
''சீட் கிடைக்காமல் வேறு கட்சிக்குச் சென்றவர்களை அம்மாவின் ஆவி சும்மா விடாது'' என்று எச்சரித்தது தமிழக வாக்காளர்கள் கவனத்தில் கொள்ளத்தக்கது.
'கடந்த காலங்களில் அம்மாவின் இரட்டை இலைக்கு ஓட்டுப் போட்டுவிட்டு, இப்போது வேறு கட்சிக்கு ஓட்டுப் போடுபவர்களையும் அம்மாவின் ஆவி சும்மா விடாது' என்பதை அவர்கள் உய்த்துணர்வார்களாக.
அம்மாவின் ஆவி மிக மிக மிகவும் சக்தி வாய்ந்தது. அதனினும் மேலான சக்தி வேறு எங்கும் இல்லை. கட்சி மாறி ஓட்டுப் போடுபவர்களை அது கண்டிப்பாகத் தண்டிக்கும். எனவே.....
இந்தத் தேர்தலிலும் என் ஓட்டு அ.தி.மு.க.வுக்கும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கே என்பதை உறுதிபட அறிவிக்கிறேன்...கூவுகிறேன்!
==================================================================================
நன்றி: தினகரன்[24.03.2019]
தேர்தல் நேரத்தில் இப்படி பலர்..... :)
பதிலளிநீக்குநன்றி நண்பர் வெங்கட் நாகராஜ்.
நீக்குநண்பரே இந்தப்பதிவை படிக்கும்போது அடிவயிற்றை கலக்குகிறதே...
பதிலளிநீக்கு- கில்லர்ஜி
ஆவி, பூதம்னு அமைச்சர் அடிச்சிவிட்டிருக்கார். அதை வெச்சி நானும் ஒரு பதிவு தேத்திட்டேன். நாம் விரும்புகிற கட்சிக்கு வாக்களிப்போம். நன்றி நண்பரே.
நீக்கு