நாடறிந்த தன் ''சரவணபவன்' உணவுவிடுதியை உலகறியச் செய்யும் ஆசையாலோ என்னவோ, ஒரு ஜோதிடரை அணுகி, தன் ஜாதகம் தந்து பலாபலன்களைக் கணிக்கச் சொன்னார் சரவணபவன் உரிமையாளர் திரு.ராஜகோபால்.
''நீங்கள் இளம்பெண் ஒருத்தியை மூன்றாவதாக மணம் புரிந்தால் உங்கள் 'ஆசை' நிறைவேறும்'' என்றார் ஜோதிடர்[எந்த ஜோதிட சாஸ்திரத்தில் இதெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறதென்று தெரியவில்லை] இதன் பிறகான நிகழ்வுகள் நீங்கள் அறிந்தவைதான். சுருக்கம் கீழே.....
ஜீவஜோதியை அடைவதற்காக, அவரின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை அடியாட்கள் உதவியுடன் கொலை செய்தார் ராஜகோபால்.
இது தொடர்பாக, பூந்தமல்லி நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், அது ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை[உடந்தையாக இருந்தவர்களுக்கும்தான்] விதித்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் ராஜகோபால். அது குற்றத்தின் கடுமையைக் கருத்தில் கொண்டு 10 ஆண்டுத் தண்டனையை ஆயுள் தண்டனை ஆக்கியது.
உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் பிரமுகர். அது, ஆயுள் தண்டனையை உறுதி செய்துவிட்டதாக இன்று செய்தி வெளியாகியுள்ளது[தினகரன்{30.03.2019] நாளிதழ்].
இச்செய்தியைப் பிறருடன் பகிரும் நோக்கத்துடன் இப்பதிவை நான் வெளியிடவில்லை. ராஜகோபால் அவர்கள் செய்த ஒரு மாபெரும் தவற்றைச் சுட்டிக்காட்டத்தான்.
ஜோதிடத்தில் அளவிறந்த நம்பிக்கை கொண்டவர் இவர். இந்த நம்பிக்கைதான் தொழில் தொடர்பாக ஒரு ஜோதிடரை அணுகி ஆலோசனை கேட்கத் தூண்டியது.
அப்போது 50 வயதுக்காரராக இருந்த ஓட்டல் முதலாளிக்கு யாரும் பெண் தர முன்வரவில்லை. தன்னிடம் பணியாற்றிய தொழிலாளியின் மகளான ஜீவஜோதி மீது ஆசைப்பட்டார். தடையாக இருந்த அவரின் கணவரையும் தீர்த்துக்கட்டினார். இங்கேதான் பெரும் தவறு நிகழ்ந்திருக்கிறது. அது.....
தொழில் முன்னேற்றத்திற்கான ஆலோசனை பெற்றிட எந்த ஜோதிடரை அணுகினாரோ, அதே ஜோதிடரை அணுகி.....
''சாந்தகுமாரைப் போட்டுத் தள்ளலாமா, வேண்டாமா?'' என்று கேட்டிருந்தால், மிகத் துல்லியமாக ஜாதகம் கணித்துப் பலன் சொல்லியிருப்பார் ஜோதிடர்!!! சரிதானே?
தரமான உணவகம் நடத்துவதில் மாபெரும் சாதனை நிகழ்த்தியவரும், பக்தியுள்ளம் கொண்டவருமான ஒரு பெரிய மனிதருக்கு ஏற்பட்ட அவலம் குறித்துப் பெரிதும் வருந்துகிறேன்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சாந்தகுமாரை போட்டுத் தள்ளலாமா ?
பதிலளிநீக்குஇதற்குகூட சோதிடம் பார்க்கலாமா நண்பரே... இதென்ன கூத்து ?
ஜோதிடர்களால் இது மாதிரி எத்தனையோ கூத்துகள் நடக்குது!
நீக்குஉடன் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி கில்லர்ஜி.
தனி மனிதனின் ஆசைகள்... விருப்புகள்! அவனை எங்கெல்லாம் எதையெல்லாம் செய்யத் தூண்டுகிறது! தன் ஆசைக்காக எதையும் செய்யத் துணிகிறார்கள் சிலர்!
பதிலளிநீக்குஅந்தச் சிலரிலும் மிகச் சிலர்தான் அகப்பட்டுக்கொள்கிறார்கள்.
நீக்குமிக்க நன்றி வெங்கட்.