கீழ்வரும் 'தமிழ் இந்து' நாளிதழ்ச் செய்தி வாசிப்போரைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பா.ஜ.க.வின் தேசியச் செயலாளர் என்ற வகையில் எச்.ராஜாவுக்கு எதிரிகள் இருப்பதற்கு வாய்ப்புள்ளது. எதிரிகளால் தனக்கு ஏதேனும் தீங்கு நேரும் என்று நினத்தால் காவல்துறையிடம் அவர் புகார் செய்யலாம்; கட்சித் தலைவர்களின் உதவியையும் நாடலாம். தவறில்லை. ஆனால் ராஜாவோ சிக்கல் சிங்காரவேலர் கோயிலில் யாகம் நடத்தியிருக்கிறார்.
பா.ஜ.க.வின் தேசியச் செயலாளர் என்ற வகையில் எச்.ராஜாவுக்கு எதிரிகள் இருப்பதற்கு வாய்ப்புள்ளது. எதிரிகளால் தனக்கு ஏதேனும் தீங்கு நேரும் என்று நினத்தால் காவல்துறையிடம் அவர் புகார் செய்யலாம்; கட்சித் தலைவர்களின் உதவியையும் நாடலாம். தவறில்லை. ஆனால் ராஜாவோ சிக்கல் சிங்காரவேலர் கோயிலில் யாகம் நடத்தியிருக்கிறார்.
நடக்கவிருக்கும் தேர்தலில் அவர் போட்டியிடுகிறார். போட்டியில் எதிரி வேட்பாளர்களைத் தோல்வியுறச் செய்வதற்காக/தான் வெற்றி பெறுவதற்காக அவர் யாகம் நடத்தினாரா என்றால், அல்ல...அல்லவே அல்ல. பின் எதற்காக?
கீழ்வரும் 'தமிழ் இந்து'வின் செய்தி அவர் நடத்தியது 'சத்ரு சம்ஹார யாகம்' என்கிறது. செய்தியின் கடைசிப் பத்தியில், 'சத்ரு சம்ஹார யாகம் என்பது, எதிரிகளை அழிப்பதற்காக நடத்தப்படும் யாகம் என்பது குறிப்பிடத்தக்கது' என்று அதற்கான விளக்கத்தையும் தந்திருக்கிறது.
எதிரியால் தனக்கு நேரிடவிருக்கும் ஆபத்தைத் தடுக்கக் காவல்துறையின் உதவியை நாடலாம். பதிலாக, எதிரியை ஒழித்துக்கட்டுவதற்காக அடியாட்களின் உதவியை நாடினால் அது சட்டப்படி குற்றமாகும். ஆக.....
எதிரியானாலும் அவனைத் தன்னிச்சையாகவோ, அடியாட்களின் உதவியுடனோ அழிக்க முயல்வது [Attempted to murder] குற்றம் என்பது அறியத்தக்கது.
இச்செய்தியின்படி, எச். ராஜா தன் எதிரியை/எதிரிகளை அழிக்க அடியாட்களை நாடவில்லை. பதிலாக, கடவுளிடம் வேண்டுகோள் வைத்து, 'சத்துரு சம்ஹார யாகம்' செய்திருக்கிறார். இதுவும் ஒரு கொலை முயற்சிதான் என்பதில் எள்முனையளவும் சந்தேகமில்லை.
இக்குற்றத்தைச் செய்ததற்காக எச்.ராஜா கைது செய்யப்படுவாரா?
கீழ்வருவது 'தமிழ் இந்து' நாளிதழின் செய்தி.
சிக்கல் சிங்காரவேலவர் கோயிலில் எச்.ராஜா நடத்திய சத்ரு சம்ஹார யாகம்
நாகப்பட்டினம்
//சிக்கல் சிங்காரவேலவர் கோயிலில் பாஜக பிரமுகர்களுக்குகூட தெரியாமல் ரகசியமாக நடந்த யாகத்தில் எச்.ராஜா கலந்துகொண்டார்.
பாஜக தேசிய செயலாளரும், சிவகங்கை மக்களவைத் தொகுதி வேட்பாளருமான எச்.ராஜா, தன் குடும்பத்தினருடன் நாகை மாவட்டம் சிக்கலில் உள்ள சிங்காரவேலவர் கோயிலுக்கு நேற்று அதிகாலை வந்தார்.
அங்கு நடந்த சத்ரு சம்ஹார யாகத்தில் அவர் கலந்துகொண்டார். யாகம் முடிந்து குருக்கள் கொடுத்த பிரசாதத்தை பெற்றுக்கொண்டு அங்கிருந்து சிவகங்கைக்கு புறப்பட்டுச் சென்றார்.
ரகசியமாக நடந்த யாகம்
அவரது சிக்கல் வருகை பாஜக பிரமுகர்களுக்கு கூட தெரிவிக்கப்படவில்லை. கோயிலில் நடைபெற்ற யாகம் குறித்தும் கட்சிப் பிரமுகர்களுக்கு தகவல் எதுவும் தெரிந்துவிடாமல் வெகு ரகசியமாக நடத்தப்பட்டது. சிக்கலைச் சேர்ந்த வெகு சிலர் மட்டுமே கோயிலுக்கு வந்திருந்தனர். ஆனால்,அவர்களும் யாகத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை.
சத்ரு சம்ஹார யாகம் என்பது, எதிரிகளை அழிப்பதற்காக நடத்தப்படும் யாகம் என்பது குறிப்பிடத்தக்கது//
சிரிப்பதை தவிர வேறு வழியில்லை தோழர்...
பதிலளிநீக்குரகசியமாக நடத்தப்பட்ட யாகமாம். அப்புறம் எப்படி பத்திரிகை செய்தி வெளியிட்டது?
நீக்குநன்றி நண்பர் தனபாலன்.
இங்கே அனைத்துமே ரகசிய செய்தி தான்! :)
பதிலளிநீக்குரகசியத்தை அம்பலப்படுத்தியது இந்து தமிழின் சாமர்த்தியம்.
நீக்குமிக்க நன்றி நண்பரே.