பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 26 மார்ச், 2019

ஒரு ஓட்டுக்கு ரூபாய் 2 லட்சம்!!!

ஒரு ஓட்டுக்கு வெறும், 500 ரூபாய், 5,000 ரூபாய் என்று விலை பேசப்படும் தமிழக வாக்காளர்களே! உங்கள் ஓட்டின் உண்மையான விலை என்ன தெரியுமா? வெறும் 500 ரூபாயோ, 5,000 ரூபாயோ அல்ல; 2 லட்சம் ரூபாய். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? 

இப்படி ஒரு கணக்கை துாக்கிப் போடுகிறது, ஒரு, 'வாட்ஸ் ஆப்' புள்ளி விவரம்.....  

தமிழக மக்கள் தொகை குத்துமதிப்பாக 7.50 கோடி; இதில், 1.75 கோடி பேர் குழந்தைகள். மீதமுள்ள, 5.75 கோடி பேர் வாக்காளர்கள். இதில், ஆண்கள், 3.50 கோடி. இவர்களில், 30 சதவீதம் பேர், 'குடிமகன்'கள் என, வைத்துக் கொண்டால், 1 கோடி பேர் குடிக்கின்றனர்.

ஒரு குவார்ட்டர் பல விலைகளில் விற்றாலும், 50 ரூபாய் லாபம். ஒரு கோடி பாட்டிலுக்கு, 55 கோடி ரூபாய் லாபம். இது, ஆண்டுக்கு, 20,075 கோடி; ஐந்து ஆண்டுகளுக்கு, 1 லட்சம் கோடி ரூபாய் லாபம். இது, உன் பணத்தில் இருந்து, உன்னிடம் கொள்ளை அடித்தது. மணல் கொள்ளைஇதில், ஆண்டுக்கு, 25 ஆயிரம் கோடி ரூபாய்; ஐந்து ஆண்டுக்கு, 1.25 லட்சம் கோடி ரூபாய்; தாது மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளைகளிலும் தலா, ஆண்டுக்கு, 25 ஆயிரம் கோடி ரூபாய்; ஐந்தாண்டுகளுக்கு, 1.25 லட்சம் கோடி ரூபாய். ஆம் இது, உன் தாய் மண்ணில் அடித்த கொள்ளை. இன்னும்.....

நாள் ஒன்றுக்கு, 4,000 மெகாவாட் மின்சாரக் கொள்முதலில், யூனிட்டுக்கு, 22 காசுகள் கமிஷன் பெறுவதாகக் குற்றச்சாட்டு உள்ளது. மொத்தம், 30 ஆயிரம் மெகாவாட்டிற்கும் கணக்கிட்டால், 66 கோடி ரூபாய்; ஆண்டுக்கு, 24 ஆயிரம் கோடி ரூபாய்; ஐந்து ஆண்டுகளுக்கு, 1.20 லட்சம் கோடி ரூபாய் கமிஷன் போகிறது. இது, உன் பணத்தில் இருந்து, உன்னிடமே கொள்ளை அடித்தவை.

அரசுக் கட்டுமான ஒப்பந்தங்கள் மூலம், அரசுக்கு மறைமுக இழப்பு, 5 லட்சம் கோடி ரூபாய்; போக்கு வரத்து, பணி நியமனம், பொது வினியோகம் என்ற வகையில், தலா, ஒரு லட்சம் கோடி ரூபாய்; இலவசங்கள் என்ற பெயரில், மறைமுக இழப்பு 2 லட்சம் கோடி ரூபாய்; என, 10 லட்சம் கோடி ரூபாய் கொள்ளை நடந்துள்ளது.

மொத்தம், பத்து இனங்களிலும், 15 லட்சம் கோடி ரூபாய் வரை, மக்கள் வரிப்பணம் மறைமுகமாக கொள்ளை அடிக்கப்படுகிறது. 

இவற்றையெல்லாம் கணக்கிட்டால், தமிழகத்தில் உள்ள, 5.75 கோடி ஓட்டுகளுக்கும், சராசரியாக, தலா, 2 லட்சம் ரூபாய் தரலாம். குறுக்கு வழிகளில் கோடிகோடியாய்ச் சம்பாதித்த பணக்கார வேட்பாளர்கள் தேர்தல் நேரத்தில் மக்களுக்குத் தருகிறார்கள். அதை அவர்கள் பெற்றுக்கொள்வதில் தவறே இல்லை எனலாம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி: தினமலர் 04.05.2016

6 கருத்துகள்:

  1. விலை மதிப்பிட முடியாதது மக்களின் வாக்கு...

    உதாரணம் ஒன்று : விவசாயி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் சிறப்பான வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  2. மக்கள் மாக்களாக இருக்கும்வரை இந்தக்கணக்கு விளங்காது நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாக்கள் மக்களாக மாறிவிடாமல் தடுத்துக்கொண்டிருப்பவர்கள் அரசியல்வாதிகள் அல்லவா!

      மிக்க நன்றி நண்பரே.

      நீக்கு
  3. ம்ம்ம்ம்.... விலை மதிப்பில்லாதது ஓட்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது விலைபேசப்படுவதைப் பார்க்கும்போது விலைமாதரின் நினைவு வந்துபோகிறது.

      மிக்க நன்றி வெங்கட்.

      நீக்கு