அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் வயிற்றுப்பாட்டுக்காக மட்டுமே வேலை தேடிப் போகிறார்கள் என்பது தெரிகிறது.
நாளும் வறுமையுடன் உறவாடும் பலருக்கிடையே கூட்டு வண்டிகளில் பயணிப்போரும், குடை பிடித்துச் செல்வோரும் சற்றே வசதியுடன் வாழ்ந்தவர்களாக இருக்கக்கூடும்.
வண்டிகளுக்குப் பின்னே ஓடுபவர்கள் அடிமைகளாக இருக்கலாம்.
ரவிக்கை அணியாமல் சேலை மட்டுமே உடுத்துச் செல்லும் நம் தாய்க்குலம். அரைகுறை ஆடையில் அழகுப் பிரதேசங்களைக் காட்சிப்படுத்தும் அநாகரிகம் தலைதூக்காத காலம் அது.
இவர்கள் காலமெல்லாம் வறுமையுடன் உறவாடியவர்கள் என்றாலும், வஞ்சனை சூதுவாது பொறாமை கயமை போன்றக் கெட்டக் குணங்கள் பற்றிப் பெரிதும் அறியாதவர்கள் என்றே தோன்றுகிறது.
இந்தக் காணொலி தற்செயலாகக் கண்ணில்பட்டது.
கீழ்க்காண்பது ‘யூடியூப்’இல் தேடி எடுத்தது.
இரண்டையும் ஒப்பிட்டபோது, 1906க்கும் 2025க்கும் இடைப்பட்டக் காலத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் பிரமிக்கச் செய்தன.
ஆனாலும், அன்றைய அப்பாவி மனிதர்களை, பொல்லாத பல கெட்டக் குணங்களின் புகலிடமாக மாறிவிட்ட இன்றைய மனிதர்களுடன் ஒப்பிட்டதில் மனம் வெகுவாகக் கனத்தது.
