எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

திங்கள், 1 ஜனவரி, 2024

பொல்லாத புத்தாண்டு! மனமார்ந்த வருத்தங்கள்!!

புத்தாண்டு[2024]ப் பிறப்பை ஒட்டி, பட்டாசுகள் வெடித்து மகிழ்ந்தும், வாழ்த்துகளைப்ப் பகிர்ந்தும் உலகெங்கிலும் உள்ள மக்கள் இந்த நாளை இன்று கொண்டாடியிருக்கிறார்கள்; கொண்டாடுகிறார்கள்.

இது ஆண்டாண்டுதோறும் இடம்பெறும் நிகழ்வுதான்.

ஒட்டுமொத்த மண்ணுலக மக்களின் அறியாமையை இது அடையாளப்படுத்துகிறது என்பதே என் எண்ணம்.

கொஞ்சம் சிந்தித்தால்.....

இளவட்டங்கள் தங்களின் வாலிபத்தில் கணிசமான அளவு இழக்கிறார்கள் என்பதையும், நடுத்தரங்கள் முதுமைப் பருவத்தை எட்டிப் பிடிப்பது ஓராண்டு முன்னதாகவே நிகழவுள்ளது என்பதையும், மரணத்தைத் தொட்டுவிடக் காத்திருக்கும் கிழடுகளின் மரண பயத்தை இது அதிகரிக்கிறது என்பதையும் அறியலாம்.

ஆகவே, புத்தாண்டுப் பிறப்பு என்பது வாழ்த்துகளைப் பகிர்ந்து மகிழ்வதற்குரியதல்ல; வருந்துவதற்குரியதே என்பது புரியும்.

இதை இப்போது புரிந்துகொண்ட அனைவருக்கும்.....

 அடியேனின் புத்தாண்டு வருத்தங்கள்!

ஹி... ஹி... ஹி!!!