அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 2 ஜனவரி, 2024

குஜராத்தியரும்[மோடி&அமித்ஷா] பீகாரியும்[நிதிஷ் குமார்] இந்தியைக் கொண்டாடுவது ஏன்?!

ந்திய மொழிகளை ஆரிய மொழிக் குடும்பம், திராவிட மொழிக் குடும்பம் என்று இரண்டாக வகைப்படுத்தியிருக்கிறார்கள் மொழியியல் வல்லுநர்கள். 

வட இந்தியாவில் பேசப்படும் மொழிகள் பலவும்[குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, வங்காளம், இந்தி முதலாயின] ஆரிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை என்பதால்[விரிவான செய்திக்குக் கால்டுவெல் அவர்களின் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ போன்ற மொழியியல் நூல்களை வாசிக்கலாம்] ஒரு மொழி பேசுவோர் சிறிதே முயன்றாலும் மற்ற மொழிகளைப் புரிந்துகொள்வது எளிது.

மேலும்,

இவர்களுக்கு ஆங்கிலம் கற்பதில் போதிய ஈடுபாடு இல்லை[முக்கியக் காரணம், தென்னிந்தியரை நோக்க, புத்திசாலித்தனம் குறைவு].

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் ஆங்கிலமே நிர்வாக மொழியாகவும், தொடர்பு மொழியாகவும் நீடித்த நிலையில், ஆங்கிலம் கற்பதில் தென்னிந்தியருடன் போட்டிபோட முடியாது என்பதாலும், அதில் போதிய நிபுணத்துவம் பெற இயலாது என்பதாலும், அவை காரணமாக, ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆளுவது சாத்தியப்படாது என்று அஞ்சி, அதன்[ஆங்கிலம்] இடத்தில், ஆரிய மொழிகளில் அதிகம் பேசப்படும் இந்தியை[வரிவடிவம் இல்லாத மிகப் பல சிறுபான்மை மொழிகளை விழுங்கி ஏப்பம்விட்டது இந்தி] அமர வைத்தார்கள்.

இது தவிர,

வாஜ்பாய், மொரார்ஜி தேசாய் போன்றவர்களின் ஆதரவுடன் நடுவணரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகளில் இந்தி வெகு வேகமாகத் திணிக்கப்பட்டது[தமிழரின் இந்தி எதிர்ப்புப் போராட்டமும், நேரு அவர்களின் தலையீடும் இல்லாமலிருந்திருந்தால் ஆங்கிலம் பெருமளவில் அகற்றப்பட்டிருக்கக்கூடும்[அறிவியல் வளர்ச்சிக்கு ஆங்கிலம் மிக அவசியம் என்பது குறித்து ‘இந்தி’யர்கள் கவலைப்படவில்லை].

இந்தியைப் பரப்புவதில் ‘இந்தி’யருடன் ஏனைய மொழிகளைப் பேசும் வட இந்தியர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டார்கள் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

பெரிதும் கவனிக்கத்தக்கது என்னவென்றால்.....

மாநாடுகளிலும், நாடாளுமன்ற நிகழ்வுகளிலும், ஊடகப் பேட்டிகளின்போதும், ஏறத்தாழ அனைத்து வடநாட்டுத் தலைவர்களும் ஆங்கிலத்தைத் தவிர்த்து இந்தியில் பேசுவது. இந்தியின் மீதான அதீதப் பற்று என்பதைவிடவும் ஆங்கிலம் தெரியாது என்பதுதான் அதற்கான காரணம் ஆகும்.

வட இந்தியத் தலைவர்களில் பலரும் இதற்கு விதிவிலக்கானவர் அல்லர்.

அவர்களில்,

மோடியும் அமித்ஷாவும் தங்களின் தாய்மொழியான குஜராத்தியையும், நிதிஷ் குமார் தன் தாய்மொழியான பீகாரியையும் அலட்சியப்படுத்தி இந்திக்குக் கொடி பிடிப்பது கவனிக்கத்தக்கது.

பல்வேறு மொழி பேசும் வடநாட்டவர்கள் தங்களுக்கான ‘பொதுமொழி’யாக இந்தியை ஏற்றுக்கொண்டதால், அம்மொழியை ஆதரிப்பதன் மூலம், தேர்தல்களில் அவர்களின் ஒட்டுமொத்த வாக்குகளையும் அள்ளிக் குவித்துத் தொடர்ந்து இந்த நாட்டை ஆட்சி செய்யலாம் என்பதே இதற்கான முக்கியக் காரணம் ஆகும்.

இந்நிலையில்,

இந்தியைத் தென்னிந்தியாவிலும்[குறிப்பாகத் தமிழ்நாடு] பரப்புவதன் மூலம், தென்னிந்தியர்களையும் ‘இந்தி’யர் ஆக்கும் முயற்சியில் இவர்கள் தொடர்ந்து ஈடுபடுவதுதான் நம்மைப் பெரும் கவலையில் ஆழ்த்துகிறது. அதைத் தடுப்பதற்கான வழிவகைகளை ஆராய்ந்து கண்டறிந்து செயல்படுத்துவது மொழிப்பற்றும் இனப்பற்றும் உள்ள தென்னிந்தியத் தலைவர்களின் தலையாய கடமை ஆகும்.