அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 3 ஜனவரி, 2024

முதுகெலும்பு இல்லாத முட்டாள் சங்கிகள்!!!

தமிழ்நாட்டுச் சங்கிகளுக்கு[பாஜக]ப் பகுத்தறிவு மட்டும்தான் இல்லை என்று நினைத்திருந்தோம். அவர்கள் ‘முதுகெலும்பு’ம் இல்லாத கழிசடைகள் என்பதை மோடி விழாவில்  அவர்கள் செய்த இழிசெயல் மூலம் அறிய முடிகிறது.

தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட 'இந்தி தெரியாது போடா' என்ற ஹேஷ்டேக்  மிகப்பெரிய வைரலாக மாறியது. 'இந்தி  தெரியாது போடா' என்ற வாசகங்களைக் கொண்ட ஆடைகளைத் திமுகவைச் சேர்ந்தவர்களும் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் அணிந்து இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். இந்த நிலையில், இந்திக்கு ஆதரவாக, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த, 2ஆம் வகுப்புப் படிக்கும் ஏழு வயதுச் சிறுமி[துவாரகா மதிவதனி] குரல் கொடுத்திருப்பதாக ஊடகங்களில்[இந்து தமிழ்] செய்தி வெளியாகியுள்ளது.

தங்கள் ஊரில் இந்திப் பள்ளிக்கூடம்  இல்லை என்பதால் அதற்குப் பள்ளிக்கூடம் கட்டித் தரவேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்திருக்கும் அந்தச் சிறுமி, தனக்கு இந்தி படிக்க ஆசையாக இருப்பதாகவும்[“எனக்குத் தமிழ் படிக்க விருப்பமில்லை” என்று மோடிக்குக் கடிதமும் அனுப்புவாரோ?!]தெரிவித்திருக்கிறார்.

“ஓடி விளையாடு பாப்பா” என்றான் பாரதி.

இவளுக்கு வயது ஏழு. “எனக்கு அல்வா சாப்பிட ஆசையாக இருக்கிறது; கதை சொல்லக் கேட்பது மிகப் பிடித்தமானது. தீபாவளிக்குப் பட்டாசு வெடிப்பதில் கொள்ளை ஆசை” என்று சொல்லிக் குதூகளிக்கிற பருவம்.

இவள் தனக்கு இந்தி படிப்பதிலான ஆசையை ஒரு தட்டியில் எழுதி, மோடியிடம் காட்டிக் கோரிக்கை வைக்கிறாள் என்றால் இதைக் கொஞ்சமும் நம்ப முடியவில்லை.

தங்களுக்கு இந்திப் பற்று இருப்பதாக மோடியிடம் காட்டிக்கொள்வதன் மூலம், தாங்கள் அவரின் ஆகச் சிறந்த அடிமைகள் என்பதை அடையாளப்படுத்தி, அனுகூலங்களைப் பெறுவதற்கான இழிசெயலை இந்தச் சங்கிச் சாக்கடைகள் செய்திருக்கிறார்கள்.

இவளின் கோரிக்கையை ஏற்று, உடனடியாகத் தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளில் இந்தி கற்பிக்க நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் ஸ்டாலினுக்கு மோடி உத்தரவு போடுவது சாத்தியமானதா என்ன?

தமிழ்நாடு அரசு, அரசுப் பள்ளிகளில் இந்தி கற்பிக்காததைக் கண்டிக்க விரும்பினால், சங்கிகள் போராட்டம் நடத்தலாம்; உண்ணாவிரதம் இருக்கலாம். உயிரிழக்க நேரின், ‘இந்திக்காக உயிரைக் காணிக்கை ஆக்கிய தியாகிகள்’ என்று இவர்களின் பெயர்கள் ‘இந்தி’யர் வரலாற்றில் பெரிய பெரிய எழுத்துகளில் பொறிக்கப்படும்.

ஆக, இம்மாதிரியான ‘தில்’லான நடவடிக்கைககளை மேற்கொள்ளாமல், ‘இந்தி படிக்கணும்’ என்று இவர்களால் எழுதப்பட்ட தட்டியைக் காவி உடை அணிவிக்கப்பட்ட ஒரு சின்னஞ் சிறுமியின் கைகளில் கொடுத்து, அவளின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டிருக்கும் கோழைகள் இவர்கள்; வெட்கம் கெட்டவர்கள்; சுத்தச் சுயநலவாதிகள்; தன்மானத் தமிழர்களின் எதிரிகள்.

தமிழினம் இவர்களை ஒருபோதும் மன்னிக்காது.

* * * * *

https://kamadenu.hindutamil.in/politics/nagapattinam-girl-requests-modi-to-build-a-school-to-study-hindi

https://m.dinamalar.com/detail.php?id=3518337