கீழ்க்காண்பது, இன்றைய நாளிதழ் ஒன்றின் முகப்புப் பக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘திருப்பாவை’ப் பாடல் வரிகளும் அவற்றிற்கான தெளிவுரையும். இவற்றை வாசிப்பதற்கு முன்பாக, ஒரு சிறுகதையின் சில வரிகளை இங்குப் பதிவு செய்கிறேன்.
அவற்றை நீங்கள் வாசித்த பின்னர், திருப்பாவைப் பாடல் வரிகளையும் தெளிவுரையையும் வாசித்து மகிழலாம்.
சிறுகதையின் சில வரிகள்:
‘.....அர்த்த ராத்திரிவரை ஆசை தீரப் பேசி, முன்விளையாட்டுக்குப் பிறகு உடலுறவு இன்பமும் அனுபவித்து முடித்து, விடியும்வரை அவன் அவளின் கொங்கைகளின் மேல் படுத்து உறங்கினான்[‘கொங்கை>மார்பகம்].
ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கிவிட்ட அவனைப் பிரிய மனமில்லாததால், விடியும்வரை அவள் அவனைச் சுமந்துகொண்டிருந்தாள்.....’
இது மனித இன ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான நிகழ்வாகும்.
உடலுறவு கொள்ளும் நேரம் என்பது ஆளாளுக்கு மாறுபடும். அதில் பிரச்சினை இல்லை.
‘அவளின் கொங்கைகளின் மேல் அவன் படுத்து உறங்கினான்’ என்பதும், விடியும்வரை அவனை அவள் பிரியவில்லை என்பதும்தான் மனதை உறுத்துகின்றன[சேர்க்கைக்குப் பிறகு, சற்று நேரம் அணைத்த நிலையில் கிடப்பது சரியாக இருக்கலாம். அது கணவன் மனைவிக்கிடையேயான உறவை மேம்படுத்தும் என்பார்கள்].
விடியும்வரை இரண்டறப் பிணைந்து கிடப்பது எதார்த்தமா?
எதார்த்தமோ அல்லவோ, இது அற்ப மனிதர்களுக்கிடையேயான நிகழ்வு என்பதால் அலட்சியப்படுத்திவிடலாம்.
இனி, அடுத்து இடம்பெற்றுள்ள பட நகலை வாசியுங்கள்.
“எங்கள் குரல் கேட்டு வாய் திறந்து பேசமாட்டாயா?” என்று பெண்கள் கேட்பது விடிந்த பின்னர் என்பது அறியத்தக்கது]
மேற்கண்ட நிகழ்வில்[படம்], “நப்பின்னைக் கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா” என்று விளிக்கப்பட்டிருக்கிறான் கிருஷ்ணன்.
மார்பைக் கொங்கை மேல் வைத்து உறங்கினான் கண்ணன் என்றால், இதைச் செய்வதற்கு முன்பு, தன் மனைவியான நப்பின்னையுடன் உடலுறவு கொண்டான் அவன் என்பது அறியத்தக்கது.
கிருஷ்ணனோ கோகுலக் கண்ணனோ, அப்படியொரு கடவுள் உண்டென்று நம்பினால், அவர் குறை தீர்ப்பார் என்று எண்ணினால், கோயில் கட்டி, விழா எடுத்துக் கொண்டாடுவதோடு நிறுத்திக்கொள்ளலாம்.
அவருக்கொரு பெண்டாட்டியைக் கொடுத்து, உடலுறவு கொள்ளவைத்து, இரவெல்லாம் அவளின் கொங்கை மேல் படுத்துக்கிடந்தான் அவன்[மனிதர்களுக்குத்தான் வறுமை, நோய், வயிற்றுப்பாட்டுக்கான போராட்டம் எல்லாம். கண்ணனுக்கு அதெல்லாம் இல்லை. அதனால், எவ்வளவு நேரமும் கொங்கை மேல் படுத்து உறங்கலாம்] என்று கதை சொல்ல வெட்கமாக இல்லையா இந்த ஆண்டாள் பாடலை மீள் பரப்புரை செய்பவர்களுக்கு?
கிருஷ்ணன் எவ்வளவு நேரம்[கடவுள்களுக்கு ஏது நேரம் காலம் கணக்கெல்லாம்?] தன் கொங்கைகளின் மேல் கிடந்து உறங்கினாலும் அவனை எழுப்பமாட்டாளாம் நப்பின்னை. அவன் மீது அத்தனைப் பிரியமாம் அவளுக்கு.
7ஆம் நூற்றாண்டில், ஒரு பெண்[ஆண்டாள்] பக்திப் பித்தேறிப் பாடிய இது போன்ற பாடல்களை, இப்போதும், விசேட நாட்களில் பாடிப் பரவசப்படுவதாலும் பரப்புரை செய்வதாலும்[இன்றைய தினத்தந்தியின் முகப்புப் பக்கதில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது. இணைப்புகள் மூலம் மூடப் பக்திப் பித்தர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது போதாதென்று முகப்புப் பக்கத்தின் ஒரு பகுதியையும் வீணடிக்கிறார்கள்] மக்களுக்குக் கொஞ்சமே கொஞ்சமும் பயனில்லை என்பதை கிருஷ்ண தாசர்களும் ஊடகக்காரர்களும் உணர வேண்டும்.