நாத்திகராக இருப்பவர்கள் பெரிதும் மதிக்கத்தக்கவர்கள். அவர்களுக்குள்ள பல நற்குணங்களே அதற்கான காரணங்கள் ஆகும்.
அவற்றில் குறிப்பிடத்தக்கவை:
*கடவுள் குறித்த விவாதங்களாகட்டும், எதிர்கொள்ளும் பிரச்சினைகளாகட்டும் அவை தொடர்பாகக் கருத்துத் தெரிவிப்பவர்கள் எவராயினும்[ஆன்மிகர்கள் உட்பட] அவர்களை மிகவும் மதிக்கிறார்கள்.
*ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டும் அறிவியலைப் போற்றுகிறார்கள். வாழ்க்கைக்குப் பயன்படுகிற அணுக்கள், அண்டம், நுண்ணுயிர்கள் போன்றவை பற்றி அறிவியல் அறிஞர்கள் அதிகம் ஆராய்வதை அவர்கள் வரவேற்கிறார்கள்.
*மரணத்திற்குப் பின்னரான வாழ்க்கை பற்றிய சிந்தனையில் ஈடுபடுவதைக் காட்டிலும், இக உலக வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும் மகிழ்ச்சியானதாகவும் ஆக்க உதவுவது பற்றியே அதிகம் சிந்திக்கிறார்கள்.
*கடவுள் வழிபாட்டைவிடவும், பரிவு, கருணை, நேர்மை போன்ற நற்குணங்களுடன் ஒருவரையொருவர் மதித்து வாழ்வதையே அவர்கள் விரும்புகிறார்கள்.
*நாத்திகர்கள் பெரிதும் நகைச்சுவை உணர்வுள்ளவர்கள். அது சவால்களை எதிர்கொள்ளவும், மக்களுடனான தொடர்பை இணக்கமுள்ளதாக ஆக்கவும் பயன்படுகிறது.
*அவர்கள் இயற்கையின் அதிசயங்களை மிகவும் ரசிக்கும் மனப்பான்மை கொண்டவர்கள். அது அறிவியல் மீதான மதிப்பைக் கூட்டுகிறது.
*கடவுள் மறுப்பாளர்கள் படைப்பாற்றல் மிக்கவர்கள். அது அவர்களின் அனுபவங்களைப் பிறருடன் பகிர உதவுகிறது.
*அவர்களுக்குப் புதியனவற்றைக் கற்கும் ஆர்வமும் அதிகம்.
*எதார்த்த வாழ்வின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அதிக நாட்டம் கொண்டவர்கள் நாத்திகர்கள்.
*சகிப்புத்தன்மையின் இருப்பிடம் அவர்கள். துன்பங்களை எதிர்கொண்டு சளைக்காமல் ஆராய்ச்சியில் ஈடுபட அது உதவுகிறது.
* * * * *
அனைத்துத் தகவல்களையும் அறிந்திட
People Who Don’t Believe In God Often Have These 15 Qualities Too