வெள்ளி, 6 டிசம்பர், 2024

ஆண்டவன் எவ்வழி அவ்வழி அர்ச்சகர்!!!

ந்து மதத்தில்தான் எத்தனை எத்தனைக் கடவுள்கள்! பிரபலமானவர்களில் கணிசமானவர்கள் ஆபாசச் செயலில் ஈடுபட்டவர்கள்தான்[மோகினி வடிவெடுத்த விஷ்ணுவை ஆண் என்றும் பாராமல் காம வெறியுடன் சிவபெருமான் விரட்டிச்சென்று புணர்ந்தது[விளைவு: ஐயப்பன் பிறப்பு. “சாமியேய் சரணம் ஐயப்பா”]; சூரன் மனைவி விருதை மீது ஆசைப்பட்ட விஷ்ணு, சண்டையிட்டு அவனைக் கொன்று, அவன் உருவிலேயே விருதையைப் புணர்ந்தது; பார்வதியின் முக அழகில் மயங்கி விந்துவை வெளியேற்றியது என்றிவை போன்றவை உதாரணங்கள்] அவர்களில் சிலரின் பிறப்பே படு அசிங்கமானதுதான்.

கோயில்களில் அர்ச்சகராகப் பணி செய்பவர்கள் அனைவருமே இம்மாதிரியான புராணக் கதைகளை வாசித்து அறிந்தவர்கள்தான்.

கதைகள் அவ்வப்போதோ அன்றாடமோ அவர்களின் மனத்திரையில் வலம் வந்து அவர்களைச் சலனப்படத் தூண்டுவது இயற்கையே. மேலும் சில காரணங்களால், கோயில்களில் பணி செய்யும்போது சலனம் சபலமாக மாறுவது தவிர்க்க இயலாதது.

கோபுரங்களிலும் கோயிலின் உட்புற வளாகச் சுவர்களிலும் செதுக்கப்பட்டுள்ள ஆண் பெண் கலவியைக் காட்சிப்படுத்தும் சிற்பங்கள், கோயிலில் மேற்கூரைகளில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் என்றிவையும்கூட அர்ச்சகரின் கவனத்தை ஈர்த்துத் தம் பங்குக்கு அவரின் காம உணர்ச்சியைத் தூண்டுகின்றன[இம்மாதிரிச் சிற்பங்கள் அகற்றப்படுதல் வேண்டும் என்று வற்புறுத்த எந்தவொரு ஆன்மிக நெறி பரப்புபவருக்கும் ‘தில்’ இல்லை; பகுத்தறிவாளர்கள் தலையிட்டால் ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்வார்கள்].

இறைவனின் சந்நிதிக்குச் செல்லும் வழியிலேயே இருபுறமும், மேலாடை தவிர்த்துப் பருமானான கொங்கைகளைக் காட்டும் மங்கையரின் உயர உயரமான சிற்பங்கள் தம் பங்குக்கு அர்ச்சகரின் அடங்காத ஆசைக்குத் தூபம் போடுகின்றன.

இவ்வாறான, அந்தரங்க ஆசையைக் கிளறிவிடுகிற படு மோசமான சூழலில், அர்ச்சகர் ஒருவர் கோயில் என்றுகூடப் பாராமல் அந்தச் சுகத்தைப் பெறுவதற்கான வழிவகைகளைத் தேடவே செய்வார்.

செய்தி[கீழே + காணொலி]யில் இடம்பெற்றுள்ள அர்ச்சகர் திலகர் முற்றும் துறந்த முனிவர் அல்ல என்பதால், கோயிலருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுமியிடம் ஆபாசச் செயலில் ஈடுபட்டுள்ளார்.

அவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

இவ்வவழக்கு விசாரணைக்கு வரும்போது, தான் தவறு செய்ததற்கு கோயில் வளாகச் சூழ்நிலைதான் காரணம் என்பதை வலியுறுத்தினால் திலகர் மன்னித்து விடுதலை செய்யப்படுவதற்கான வாய்ப்பு மிகப் பிரகாசமாக உள்ளது எனலாம். ஹி... ஹி... ஹி!!!

                                        *   *   *   *   *

ஊடகச் செய்தி:

//தேனி பெரியகுளம் வடகரைப் பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் 70 வயது திலகர் என்ற முதியவர் பூசாரியாகப் பணிபுரிந்து வருகிறார். 

நேற்று மாலை, கோவில் முன்பாக விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுவர், சிறுமிகளுக்கு இனிப்பு வழங்கி கோவிலுக்குள் அழைத்துச்சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். 


பதறி அடித்துக்கொண்டு ஓடி வந்த சிறுமி நடந்ததைப் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். 


இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோவில் முன்பாகக் கூடியதைத் தொடர்ந்து, அவர்கள் தன்னைத் தாக்கி விடுவார்கள் என எண்ணி, பூசாரி திலகர் கதவைப் பூட்டிக்கொண்டு கோவிலுக்குள் ஒளிந்துகொண்டார். 


தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ஒளிந்திருந்த பூசாரியை வெளியில் கொண்டுவந்தனர். உறவினர்கள் திரண்டு வந்து பூசாரியைத் தாக்க முயற்சித்த நிலையில் போலீசார் அவரை மீட்டு, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். 


இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமியரின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பூசாரி திலகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் 15 நாட்கள் நீதிமன்றக் காவல் சிறையில் அடைத்துள்ளனர்.


தொடர்புடைய காணொலி: