நெருப்பின் பயன்பாடு மிக அதிகம்.
பொருள்களை எரிக்க, உணவு சமைக்க, வெப்பமூட்ட, வேண்டாதனவற்றை அழிக்க, உலோகங்களை உருமாற்ற, குளிர்காய, விளக்கேற்ற என்றிப்படி இதன் பயன்பாட்டைப் பட்டியலிடலாம்.
மின்விளக்கு, பெட்ரோமாக்ஸ், லாந்தர் போன்றவை கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு, வீடுகளில் இருள் நீக்கி ஒளி ஏற்றவும்[மண் விளக்குகளில்] நெருப்பு பயன்பட்டது.
இருளில் வெளிச்சம் பெற விளக்கு பயன்படுத்தப்பட்ட காலக்கட்டத்தில் நெருப்பு[தீ] நெருப்பாகவே இருந்தது.
கோயில்களில் வெளிச்சம் சேர்க்க விளக்கு பயன்படுத்தப்பட்டபோது ஆன்மிகர்களால் ‘தீ’யில் புனிதம் ஏற்றப்பட்டுத் தீபம் எனப்பட்டது.
புனிதமான தீபத்தைப் போற்றிக் கொண்டாடுவதற்கென்று விசேட நாளைத் தேர்வு செய்து அதைத் தீபத் திருநாள் ஆக்கினார்கள்.
அதைக் கார்த்திகை மாதத்தின் ஒரு நாளில் ‘கார்த்திகைத் தீபம்’ என்னும் பெயரில் கொண்டாடுவதை வழக்கம் ஆக்கினார்கள்.
அந்த வழக்கத்தின்படி, வீட்டு வாசல்களில் மட்டுமல்லாமல், கோயில்களிலும் அது ஏற்றப்பட்டு வழிபாடும் நிகழ்த்தப்படுகிறது.
திருவண்ணாமலையின் மலை உச்சியில், பெரியதொரு கொப்பறையில் 3500 லிட்டர் நெய்யைக் கொட்டி, 1000 மீட்டர் திரியைப் போட்டு நெருப்பு வைக்கும்..... மன்னித்திடுக, மகாதீபம் ஏற்றும் நிகழ்வு உலகப் புகழ் பெற்றுவிட்டது.
இதை மிகவும் புனிதமானது என்று நம்பி வழிபடுவோர்[அறிவிலிகள்] எண்ணிக்கை கணக்கில் அடங்காதது; ஆண்டுதோறும் அதிகரித்தவாறு உள்ளது.
இந்நிலையில், பெருமழை காரணமாகத் திருவண்ணாமலையில் விபத்து[மண் சரிவு> சிவபெருமான் நெற்றிக்கண் திறந்ததால் ஏற்பட்டது என்கிறார்கள் பக்திமான்கள்] நிகழ்ந்துள்ளது. அதில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்த துக்ககரமான இந்த நாளில் அங்கு மகா தீபம் ஏற்றுகிறார்கள்[காணொலி காண்க].
அந்த ஏழு பேரின் சொந்தபந்தங்கள் துயருற்றுத் தவிக்கும் நிலையில் எதற்காக இதைச் செய்கிறார்கள்?
புனிதம் போற்றுபவர்களுக்கு ‘மனிதம்’ என்றால் என்னவென்றே தெரியாதா?!
* * * * *
[***சற்று முன்னரான செய்தி: மகாதீபம் ஏற்றப்படவுள்ளது).