அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 14 அக்டோபர், 2020

கொரோனா 4 நாட்களில் குணமாகுமா?!

#அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்காக டிரம்ப் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்ட நிலையில், அதிபரின் நெருங்கிய ஆலோசகர் ஹோப் ஹிக்ஸ் என்பவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோர் தனிமைப்படுத்திக்கொண்டு கொரோனா பரிசோதனை செய்துகொண்டனர். கொரோனா தொற்றுப் பரிசோதனை முடிவில் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகிய இருவருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதன்பின் அந்நாட்டு ராணுவ மருத்துவமனையில் டிரம்ப் அனுமதிக்கப்பட்டார்.  4 நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் திங்கள் கிழமை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வெள்ளை மாளிகை திரும்பினார்.  தொடர்ந்து அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில், அடுத்தடுத்த பரிசோதனைகளின் முடிவில் டிரம்புக்குக் கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிய வந்தது.  இதனை வெள்ளை மாளிகை மருத்துவர் சீன் கான்லே உறுதிப்படுத்தினார்.

தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட டிரம்ப், ஒரு கூட்டத்தில் பேசும்போது.....

"நான் வலிமை பெற்றவனாக உணர்கிறேன்.  பார்வையாளர்கள் கூட்டத்திற்குள் நடந்து செல்வேன்.  நான் அங்கு சென்று கூட்டத்திலுள்ள ஒவ்வொருவரையும் முத்தமிடுவேன்.  ஆடவரையும், அழகான பெண்களையும் மற்றும் ஒவ்வொருவரையும் முத்தமிடுவேன்" எனக் கூறினார்#

-என்றிப்படிச் செய்தி வெளியிட்டுள்ளது தினத்தந்தி நாளிதழ்[அக்டோபர் 13,  2020 11:07 AM]https://www.dailythanthi.com/News/TopNews/2020/10/13110733/I-will-kiss-beautiful-women-Trump-controversy-speech.vpf

4 நாள் சிகிச்சையில் கொரானாவிலிருந்து விடுபடுவது என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. டிரம்ப்புக்கு எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருக்குமேயானால் அது சாத்தியப்பட்டிருக்கக்கூடும்.

அவருக்கு, 'டெக்சாமெத்தசோன்' மாத்திரை கொடுக்கப்பட இருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியானது. அந்த மாத்திரையும் முக்கியக் காரணமாக இருக்கலாம்[தீவிர கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளவர்கள் உயிரிழப்பு விகிதத்தை குறைக்கும் என்று ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ள டெக்சாமெத்தசோன் மாத்திரையும் டிரம்புக்கு கொடுக்க மருத்துவர்கள் முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார் -https://www.bbc.com/tamil/global-54414196].

எது எப்படியோ, அறிவியலாளர்களின் அயராத உழைப்பால் வெகு விரைவில் கொரோனா அரக்கனிடமிருந்து மக்களுக்கு 100% விடுதலை கிடைத்திட வேண்டும் என்பதே நம் போன்றோரின் பெருவிருப்பம் ஆகும்.


===============================================================