அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 18 அக்டோபர், 2020

கொரோனா கொடுந்தொற்றும் முறையான 'மூச்சுப் பயிற்சி'யும்!

உலகில் உள்ள அனைவரும் இந்தக் கண்ணுக்குத் தெரியாத கிருமியால், ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறலாம். 

இது போன்ற நிலையில் நம்மைக் கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொண்டு நோயற்ற வாழ்வு வாழ நம் சித்தர்கள் கையாண்ட ' மூச்சுப்பயிற்சி' முறையை நாமும் மேற்கொள்ளலாம். 

கோவிட்-19 (Covid-19)  என்னும் பெரும் தொற்றிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்கு மிகச் சிறந்த கேடயமாக இது பயன்படும் என்பது உறுதி.

நம் முன்னோர்கள் கடைப்பிடித்த ஏராளமான விஷயங்கள் கொரோனாவை கட்டுப்படுத்த இன்று உதவிவருகிறது. ஒரு பக்கம் மூலிகை மருத்துவம் அதிசயங்களை நிகழ்த்திக்கொண்டிருக்க, யோகா (Yoga) கொரோனாவில் இருந்து விடுபடவும், பரவலைத் தடுக்கவும் முக்கியப் பங்காற்றி வருகிறது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

நாம் சாதாரணமான முறையில் சுவாசிக்கும் போது குறைந்த அளவிலான உயிர்க்காற்று[ஆக்ஸிஜன்] மட்டுமே  நுரையீரலை அடைகிறது. முறையான  பயிற்சி மேற்கொள்வதால்  நுரையீரலுக்கு அதிக அளவில் ஆக்ஸிஜன், அதாவது பிராணவாயு  கிடைக்கும். இதனால் நுரையீரல் பலம் அடைகிறது. 

நம் நுரையீரல் வலுவாக இருந்தால் கொரோனாவால் ஏற்படும் பாதிப்பை அது தடுத்துவிடும்.

இடது மூக்குத் துவாரத்தின் வழியாக  மூச்சை உள்ளிழுத்து, வலது மூக்குத் துவாரத்தின் வழியாக  வெளிவிடுவது எளிய மூச்சுப் பயிற்சி ஆகும். யோகாவில், நமது இடது மூக்குத் துவாரத்தின் வழியே மூச்சை உள்ளிழுத்து, பின்னர் அதனை வெளிவிடுவது[மூச்சை இழுத்து, சிறிது நேரம் நிறுத்து, பின்னர் வெளியிடுவது மிகுந்த பயனைத் தரும் என்பார்கள்] இடகலை என்று கூறப்படுகிறது. வலது மூக்குத்துவாரத்தின் வழியே மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவது பிங்கலை என்று கூறப்படுகிறது.

மூச்சு பயிற்சி செய்யும் போது, வெறும் வயிற்றில் இருக்க வேண்டும் என்பது முக்கியம். தினமும் ஒரே நேரத்தில் மூச்சுப் பயிற்சி செய்வது சிறந்த பலனைத் தரும்.

இந்த மூச்சுப் பயிற்சியினால், நுரையீரல் வலுவடையும் என்பதோடு, கூடுதல் பலனாக, நமது  மூளையும் புத்துணர்ச்சி பெறுகிறது. இதனால், நமது ஞாபக சக்தியும் அதிகரிக்கும்; நோய் எதிர்ப்புச் சக்தி  அதிகரிக்கும். கோவிட்-19 தொற்று நோயை எளிதாக விரட்டலாம்.

https://zeenews.india.com/tamil/health/breathing-exercises-tought-by-siddha-help-us-to-prevent-corona-338001

                     *                       *                    *                    *                      *

கோவிட்-19க்கு எதிராக 100% நம்பகமான சிகிச்சையும், தடுப்பு மருந்தும் இல்லாத நிலையில்,  பச்சைக் காய்கறிகள், பழங்கள், கொட்டைகள், விதைகள், பருப்புகள், முழுதானிய உணவுகள், தூய்மையான எண்ணெய்கள் ஆகியவற்றை முடிந்த அளவு பயன்படுத்த வேண்டும். 

சோடா, உப்பு, சர்க்கரை, கொழுப்பு போன்றவற்றின் அளவைக் குறைப்பதும், சத்தற்ற, சர்க்கரை அதிகமுள்ள உணவுகளைத் தவிர்ப்பதும் அவசியம் எங்கின்றன  உலக சுகாதார நிறுவனமும் பிரிட்டிஷ் டயட்டெட்டிக்ஸ் சங்கமும். 

உணவைத் தவிர, உடற்பயிற்சி, தியானம், போதிய தூக்கம் மற்றும் சூரிய ஒளி உடலின் மீது படுதல்[சுமார் அரை மணி நேரம் போல, மிதமான வெயிலில் காயலாம்] போன்றவை பெரிதும் பயன்படும்.

முக்கியக் குறிப்பு:

மேற்கண்ட பரிந்துரைகளைப் பின்பற்றுவதால் நல்ல பலன் கிட்டும் என்று நம்பலாம். எதிர்பார்க்கும் அளவுக்குப் பலன் இல்லையெனினும், தீமை ஏதும் விளையாது என்பது 100% உறுதி.

https://yourstory.com/tamil/fight-covid-immunity-builder-vegetables-fruits-ayurveda