லண்டன்
3 லட்சத்து 65 ஆயிரம் பேரிடம் லண்டன் இம்பீரியல் கல்லூரி நடத்திய ஆய்வில் கொரோனா தொற்று ஏற்பட்ட நபர்களிடம் உருவாகும் நோய் எதிர்ப்புத் திறன் விரைவிலேயே மறைந்து விடுகிறது என்று கூறப்பட்டுள்ளது. ஜூன் 20 முதல் செப்டம்பர் 28 வரை வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் ஆய்வுக் காலத்தில் நேர்மறை சோதனை செய்தவர்களின் எண்ணிக்கை 26.5 சதவீதம் குறைந்துவிட்டது என்று லண்டன் இம்பீரியல் கல்லூரி தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
அதில் எந்த அளவுக்கு உடலில் நோய் எதிர்ப்புத் திறன் உருவானாலும், அது சில மாதங்கள் மட்டுமே நீடிப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இம்பீரியல் கல்லூரியின் திட்ட இயக்குனர் பால் எலியட் கூறியதாவது:-காலப்போக்கில் ஆன்டிபாடிகளுக்குச் சாதகமாகச் சோதிக்கும் நபர்களின் விகிதத்தில் குறைவு இருப்பதாக எங்கள் ஆய்வு காட்டுகிறது. ஆன்டிபாடிகளுக்கு நேர்மறை சோதனை செய்வது[வதால்?] நீங்கள் கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டவர் என்று அர்த்தமல்ல. ”
எந்த அளவிலான நோய் எதிர்ப்புச் சக்தியை ஆன்டிபாடிகள் வழங்குகின்றன, அல்லது இந்த நோய் எதிர்ப்புச் சக்தி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆன்டிபாடிகளுக்கு யாராவது நேர்மறையானதைச் சோதித்தால், அவர்கள் சமூக விலகல் நடவடிக்கைகள், அறிகுறிகளைக் கொண்டிருந்தால் துணியால் பரிசோதனை செய்தல் மற்றும் தேவைப்படும் இடங்களில் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.
-இது, தினத்தந்தியில் வெளியாகியிருக்கும் கொரோனா குறித்த அண்மை[27.10.2020]ச் செய்தியாகும்.
'உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி உருவானாலும், அது சில மாதங்கள் மட்டுமே நீடிக்கும்' என்று 2ஆம் பத்தியில் குறிப்பிடப்பட்ட நிலையில், 4ஆம் பத்தியில், இந்த நோய் எதிர்ப்புச் சக்தி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று சொல்லப்பட்டிருப்பது முரண்பாடாகத் தெரிகிறது.
இம்பீரியல் கல்லூரியின் ஆய்வறிக்கையிலேயே இந்த முரண்பாடு இடம்பெற்றுள்ளதா, அல்லது, தினத்தந்தி நிருபரின் மொழியாக்கத்தில் நேர்ந்த பிழையா என்பதை, செய்தி அச்சாகும் முன்னரே கவனித்திருந்தால் பிழையைச் சரிசெய்திருக்கலாம்.
ஆங்கிலத்தில் வெளியான ஆய்வறிக்கையை முழுமையாகப் புரிந்துகொள்வதில் சிரமம் இருந்திருப்பின், இந்தச் செய்தியைத் தந்தியில் வெளியிடுவதைத் தவிர்த்திருக்கலாம் என்பது என் எண்ணம்.
நன்றி: தினத்தந்தி நாளிதழ்.
===============================================================
===============================================================
//அக்டோபர் 27, 09:07 PM
லண்டன்
3 லட்சத்து 65 ஆயிரம் பேரிடம் லண்டன் இம்பீரியல் கல்லூரி நடத்திய ஆய்வில் கொரோனா தொற்று ஏற்பட்ட நபர்களிடம் உருவாகும் நோய் எதிர்ப்புத் திறன் விரைவிலேயே மறைந்து விடுகிறது என காட்டுகிறது. ஜூன் 20 முதல் செப்டம்பர் 28 வரை வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் ஆய்வுக் காலத்தில் நேர்மறை சோதனை செய்தவர்களின் எண்ணிக்கை 26.5 சதவீதம் குறைந்துவிட்டது என்று லண்டன் இம்பீரியல் கல்லூரி தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
அதில் எந்த அளவுக்கு உடலில் நோய் எதிர்ப்புத் திறன் உருவானாலும், அது சில மாதங்கள் மட்டுமே நீடிப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இம்பீரியல் கல்லூரியின் திட்ட இயக்குனர் பால் எலியட் கூறியதாவது:-காலப்போக்கில் ஆன்டிபாடிகளுக்கு சாதகமாக சோதிக்கும் நபர்களின் விகிதத்தில் குறைவு இருப்பதாக எங்கள் ஆய்வு காட்டுகிறது. ஆன்டிபாடிகளுக்கு நேர்மறை சோதனை செய்வது நீங்கள் கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர் என்று அர்த்தமல்ல. ”
எந்த அளவிலான நோய் எதிர்ப்பு சக்தி ஆன்டிபாடிகள் வழங்குகின்றன, அல்லது இந்த நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆன்டிபாடிகளுக்கு யாராவது நேர்மறையானதை சோதித்தால், அவர்கள் சமூக விலகல் நடவடிக்கைகள், அறிகுறிகளைக் கொண்டிருந்தால் துணியால் பரிசோதனை செய்தல் மற்றும் தேவைப்படும் இடங்களில் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என கூறினார்.//