வெள்ளி, 25 மே, 2012

கடவுளின் ‘பயோ டேட்டா’!!! [தன்விவரக் குறிப்பு]

                   
1] பெயர்: ...........................................கடவுள்.



2] சிறப்புப் பெயர்கள்:...................சொல்லி மாளாது!
[பக்தர்கள் சூட்டியவை]              [’ஆதி மூலன்’, ’ஆபத்பாந்தவன்’
,                                                           ‘கருணைக் கடல்’ என்றிவ்வாறான     
                                                             நாமங்களையும், மதம்
                                                             சார்ந்த பெயர்களையும் நினைவு
                                                             கூர்க]


3] பிறந்த தேதி:.............................தான் அவதரித்த அந்தப் புனித
                                                          மான நாளைக் கண்டறிய, யுக      
                                                          யுக யுகங்ளாக ...கோடி கோடி 
                                                          கோடி ஒளி ஆண்டுகளாகச் 
                                                          சிந்தித்துக் கொண்டிருக்கிறார்
                                                          கடவுள்.


4] கல்வித் தகுதி:.........................அனைத்தும் அறிந்தவர்.


5] தொழில்:...................................அளந்தறிய இயலாத, விரிந்து
                                                           பரந்த ‘வெளி’யில் கணக்கில் 
                                                           அடங்காத கோள்களையும் 
                                                           நட்சத்திரங்களையும் பிற
                                                           வற்றையும் படைத்து உலவச்
                                                           செய்து, அவ்வப்போது அவற்றை 
                                                           மோத விட்டு, அவை வெடித்துச் 
                                                           சிதறும் கண்கொள்ளாக் காட்சி
                                                           யைக் கண்டுகண்டு ரசிப்பது.      
                                                     
                                                           மண்ணுலகில், உயிர்கள் ஒன்றோடு
                                                          ஒன்று மோதித் துன்புற்று அழிவதை
                                                          யும், வறுமை, நோய் போன்றவற்றால்                                                                                                                    சித்திரவதைக்கு   உள்ளாவதையும்                                                                                           வேடிக்கை பார்ப்பது.                                 
                                                                 


6] நண்பர்கள்:................................காணிக்கை செலுத்தியும், நேர்த்திக் 
                                                          கடன்களை நிறைவேற்றியும், “இதைக் 
                                                          கொடு...அதைத் தா” என்று தொல்லைக்கு
                                                          உள்ளாக்காதவர்கள்.


7] நல்ல நண்பர்கள்:..................அடுக்கடுக்கான வேதனைகளுக்கு
                                                          உள்ளானாலும் கடவுளை ஏசாமல்
                                                          “எல்லாம் என் தலைவிதி” என்று 
                                                          தன்னைத்தானே நொந்து கொண்டு    
                                                          நடைப் பிணமாய்க் காலம் கழிப்ப
                                                          வர்கள்.


8] எதிரிகள்:..................................கடவுள் இல்லை என்று சொல்லி, 
                                                         மூடநம்பிக்கைகளைச் சாடும்
                                                         நாத்திகர்கள் அல்ல.


                                                         கடவுளைக் காப்பதாகச் சொல்லிக்
                                                         கொண்டு, மாற்று மதத்தவர்களைக்
                                                         கொன்று குவித்து, அவர்களின் 
                                                         சொத்துகளை நாசப்படுத்தி, மிருகங்
                                                         களாய்த் திரியும்  மதவெறியர்கள்.


9] நிரந்தர எதிரிகள்:.................“நானே கடவுள்” என்று சொல்லித்
                                                         தினவெடுத்து அலையும் புதுப்
                                                         புது ‘அவதாரங்கள்’.


10] இப்போதைய கவலை:..... தம் படைப்பில் நேர்ந்த தவறுகளை
                                                        நீக்குவதற்காக, மனிதனுக்குத் தந்த
                                                        ஆறாவது அறிவை, அவன் தன் 
                                                        சுயநலத்துக்காகப் பயன்படுத்துவது.


11] நிரந்தரக் கவலை:.............படைத்தல், காத்தல், அழித்தல் 
                                                       ஆகிய தமக்குரிய முத்தொழிலை
                                                        இன்னும் எவ்வளவு காலத்துக்குச்
                                                        செய்வது?


*******************************************************************************************************************************
                                                        


                                                             

12 கருத்துகள்:

  1. என் இனிய நண்பருக்கு [முன்பனிக்காலம்],
    என் மனம் நிறைந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  2. கடவுளின் பயோடேட்டா அருமையாக இருக்கிறது. எல்லாமே ரசிக்கும்படியாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  3. பன்னாடை பரமசிவத்தின் ‘பயோ டேட்டா’



    1] பெயர்: ...........................................பரமசிவன் [கழுத்தில பாம்பு இருக்குமான்னு கேட்கப் படாது..... இவரே ஒரு பாம்புதான், இன்னொரு பாம்பு எதற்கு?]


    2] சிறப்புப் பெயர்கள்:.................சொல்லி மாளாது!
    [இவராகவே சூட்டிகொண்டவை]
    டாக்குடரு [வெறும் விஷ ஊசிதான் போடுவாரு],
    முனிவரு சாரி..... முனைவரு [கூடை முனையறவர் இல்லீங்க, இது வேற],
    பழைய பரமசிவம்,
    பன்னாடை பரமசிவம்,
    இத்தனையும் இருந்தாலும் முட்டாள் கூமுட்டை பரமசிவம் என்ற பெயர் தான் இவருக்கு ரொம்ப பொருந்தும்!!

    பதிலளிநீக்கு
  4. 3] பிறந்த தேதி:................................ அறுவது வருஷத்துக்கும் மேல ஆகுது, நாமக்கல்லுக்கு தரித்திரம் பிடிச்சு, இன்னமும் விட்ட பாடில்லை.

    பதிலளிநீக்கு
  5. 4] கல்வித் தகுதி:..............................அனைத்தும் அறிந்தவர் என்று நினைத்துக் கொண்டிருக்கும் கூமுட்டை.

    பதிலளிநீக்கு
  6. 5] தொழில்:...................................
    மெயின் தொழில் ஆணி பிடுங்குவது. இப்போ பிளாக் போடுறாரு. அதற்க்கு பின்னூட்டம் ஆஹா..... ஓஹோ........பேஷ்.......பேஷ்....... என்று வந்தால் அனுமதிப்பாறு, எதிர்த்து கேள்வி கேட்டால் கடையின் ஷட்டரை இழுத்து விட்டு விட்டு உள்ளே பதுங்கிடுவாறு. மானங் கெட்ட பொழப்பு தான் என்ன பண்றது? கடவுள் இல்லைன்னு சொல்லிட்டா நட்சத்திரங்களும், கோள்களும் இனிமே மோதி வெடித்துச் சிதறவே சிதராதா? அங்கே வாழும் உயிர்கள் இருப்பதாக இவர் நம்பும் விஞ்ஞானிகள் சொல்லாத வரை அவை மோதிச் சிதறினால் தான் என்ன நஷ்டம்?

    \\மண்ணுலகில், உயிர்கள் ஒன்றோடு
    ஒன்று மோதித் துன்புற்று அழிவதை
    யும், வறுமை, நோய் போன்றவற்றால்
    சித்திரவதைக்கு உள்ளாவதையும்
    வேடிக்கை பார்ப்பது.\\ இவரோட கருத்துப் படிதான் கடவுளே இல்லையே, இதெல்லாம் ஏன் நடக்குதுன்னு காரணத்தைக் கண்டுபிடித்து தீர்க்க வேண்டியதுதானே?

    பதிலளிநீக்கு
  7. 6] நண்பர்கள்:....................... பதிவு கேப்பமறித் தனமாக இருந்தாலும்

    \\அருமையாக இருக்கிறது. எல்லாமே ரசிக்கும்படியாக இருந்தது. \\
    \\ஹா ஹா ஹா...அருமை...! \\
    என்று பின்னூட்டம் போட்டு இவரைக் குஷி படுத்துபவர்கள். இப்படி நாலு பேரு சொல்லி விட்டால், இவரது பிளாக்கில் உணவு இல்லாமல் எழும்பும் தோலுமாக உள்ள குழந்தைக்கு உணவு சென்று விடும், கோள்களும் நட்சத்திரங்களும் இனி மோதிச் சிதறாது, உலகில் இனி உயிர்கள் ஒன்றோடு ஒன்று மோதித் துன்புற்று அழியாது, வறுமை, நோய் போன்றவற்றால் சித்திரவதைக்கு உள்ளாகாது.

    பதிலளிநீக்கு
  8. 7] நல்ல நண்பர்கள்:................ எவ்வளவு முட்டாள் தனமாக எழுதினாலும் பாராட்டி பின்னூட்டம் போடும் அல்லக் கைகள்.



    \\உள்ளானாலும் கடவுளை ஏசாமல்
    “எல்லாம் என் தலைவிதி” என்று
    தன்னைத்தானே நொந்து கொண்டு
    நடைப் பிணமாய்க் காலம் கழிப்ப
    வர்கள்.\\ நீ கடவுள் இல்லை என்று சொல்பவன் தானே? உனக்கு மேற்ச்சொன்ன எந்த பிரச்சினைகளும் வாழ்வில் வரக் கூடாதுதானே? ஆனால் உண்மையில் உன்னால் சர்க்கரை வியாதிக்கும், ரத்த அழுத்தத்துக்கும் மாத்திரைகளை உள்ளே தாளாமல் காலம் கடத்த முடியுமா? உன் வெட்டில் பாலாரும் தேனாறும் ஓடுகிறதா? கொவிக்குச் செல்லாமல் என்னைப் கடவுள் இல்லை என்று சொல்லுங்கள், இங்கேயே சொர்க்கம் பாருங்கள் என்று சொல்லுமளவுக்கு எடுத்துக் காட்டாக உன் வாழ்க்கை இருக்கிறதா? நாறிப் போன வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் உனக்கு எதற்கு இந்த வீம்பு?

    பதிலளிநீக்கு
  9. 8] எதிரிகள்:............................. எதிர்த்து கேள்வி கேட்டு பின்னூட்டம் போடுபவர்கள். [இப்போதைக்கு நான் ஒருத்தன் தான்!!]

    பதிலளிநீக்கு
  10. 9] நிரந்தர எதிரிகள்:.................. அது பழைய பன்னாடை பரமசிவம்தான். உன்னோட கெட்ட புத்திஎதான் உனக்கு எதிரி வேற யார் வேண்டும் அப்பனே?


    10] இப்போதைய கவலை:................................. சர்க்கரை வியாதி, BP


    11] நிரந்தரக் கவலை:.................. மொக்கை பதிவுகளை இன்னும் எத்தனை நாளைக்குத்தான் போட்டு காலம் தள்ளுவது?

    பதிலளிநீக்கு
  11. நன்றி சித்திரவீதிக்காரன்.
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு