இன்று, உலகில் மிகக் குறைவான மதங்களே உள்ளன. அவற்றில் கிறித்தவம், இஸ்லாம், இந்து, புத்தம், ஜைனம், யூத மதம், கன்ஃப்யூஷிய மதம், சீக்கிய மதம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
2500 ஆண்டுகளுக்கு முன்பும் ஏராளமான மதங்கள் இருந்தன. புதிய மதங்கள் தோன்றத் தோன்ற, அவை காலப்போக்கில் அழிந்தொழிந்தன; புதியவற்றுடன் இரண்டறக் கலக்கவும் செய்தன.
மதங்கள் தோன்றியதற்கான முதன்மைக் காரணம் மனிதனுக்கு இயபல்பாய் அமைந்திருந்த அச்ச உணர்வே என்பது பலரும் அறிந்த ஒன்று.
பல்வேறு காரணங்களால் பழைய மதங்கள் அழிந்து மறைந்தமை போல, இன்று ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் முன்னணி மதங்களும் காலப்போக்கில் அழிந்துபோதல் நிகழுமா என்னும் கேள்வி தவிர்க்க இயலாத ஒன்றாகும்.
''நிகழும்'' என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
அவர்கள் சொல்லும் காரணங்கள் யாவை? பட்டியல் கீழே.....
#ஒன்று:
மனிதர்களில் பலரும் கொஞ்சம் கொஞ்சமாகவேனும் மத நம்பிக்கை உட்படப் பலவகை மூடநம்பிக்கைகளிலிருந்தும் விடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது 100% உண்மை.
இரண்டு:
'உலக மக்கள் தொகையில் ஏறத்தாழ நான்கில் ஒரு பங்குக்கும் அதிகமானோர் மத நம்பிக்கையாளர்கள் அல்ல' என்னும் புள்ளிவிவரம் இதற்கு ஆதாரமாக அமைகிறது.
மூன்று;
வழிபாடு நிகழ்த்தியும்கூட, மக்கள் அனுபவிக்கும் துன்பங்களின் தொகை நாளும் அதிகரித்துக் கொண்டே இருப்பதால், கடவுளின் மீதான நம்பிக்கையை இழப்பவர்களின் தொகையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
நான்கு:
கிறித்தவ மதத்தினர் தம்முள் பிளவுபட்டு ஒரு பிரிவினர் பிற பிரிவினருடன் மோதிக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.
ஐந்து:
இஸ்லாம் மதத்திலும் பிரிவுகள் உருவாகி, ஒன்றோடொன்று மோதிப் போரிடுகின்றன.
ஆறு:
இந்து மதத்தவர்கள், பிற மதத்தவரைக் காட்டிலும் அதிக மூடநம்பிக்கைகளைக் கட்டிக்காப்பதோடு அவற்றை எதிர்ப்பவர்களைத் தாக்கும் போக்கு அதிகரித்துள்ளது. இதனால், இந்துமதத்தின் மீதான நம்பிக்கையை இழப்போரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.
ஏழு:
முன்னணி மதத்தவர் 'மத மாற்றம்' செய்யும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவதால் மதங்களுக்கிடையிலான மோதல் அதிகரிக்கும் ஆபத்தான சூழல் உருவாகி வருகிறது.
எட்டு:
சமணம் போன்ற மதங்களின் கொள்கைகள் மக்களால் எளிதாகப் பின்பற்ற இயலாதவை என்பதால் அவை மெல்ல மெல்ல அழிந்துகொண்டிருக்கின்றன.
ஆக, இத்தனை ஆண்டுகள் என்று திட்டவட்டமாய்க் கணிக்க முடியாது எனினும், காலப்போக்கில் அனைத்து மதங்களும் முற்றிலுமாய் அழிந்துவிடும் என்று ஆய்வாளர்கள் உறுதியாக நம்புகிறார்கள்#
முக்கிய குறிப்பு:
நான் ஆய்வாளன் அல்ல; இந்தப் பதிவு என் கற்பனையில் உருவானதும் அல்ல. 'த.அமலா' அவர்களால் மலையாள மொழியிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட'மதமும் பகுத்தறிவும்'[சூலூர் வெளியீட்டகம், கோவை 641402; முதல் பதிப்பு: ஜூலை, 2004] என்னும் நூலை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டதாகும்.
Tamil translation made from
YUKTHIDARSANAM[Philosophy of Rationalism]
Edited by Pavanan
Published by Yukthivada Sanghom, Calicut.
September 1982.
மதங்கள் ஒழியட்டும் மனிதம் செழிக்கட்டும்.
பதிலளிநீக்குமனிதமே மனிதர் வாழ்வைச் செழுமைப்படுத்தும்.
நீக்குநன்றி நண்பர் கில்லர்ஜி.
இப்பதிவில் போடப்பட்ட புகைப்படத்துக்கு வன்மையான கண்டனத்தை தெரிவிக்கிறேன்.
பதிலளிநீக்குஇந்து மதக்கடவுள் படத்துக்கு அருவாளோடு எங்கள் ஐயனாரை போடாமல் பிள்ளையாரை எப்படி போடலாம் ?
தவறுதான் நண்பரே.
நீக்குஇந்த ஒரு தடவை பிள்ளையார் இருந்துவிட்டுப் போகட்டும். அடுத்த வாய்ப்பு நம் ஐயனாருக்குத்தான்!
அதென்ன 'கிடுக்கி'?
பதிலளிநீக்குவிடுபட முடியாத[பிடி].
நீக்குநன்றி நண்பரே.
மிக நல்ல பதிவு! அறியாமையும் அச்சமும் மதங்களைத் தோற்றுவித்தன. பகுத்தறிவு அவற்றை அழிக்கட்டும்!
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் பாராட்டுரைக்கும் மிக்க நன்றி பாலமுரளி கிருஷ்ணா.
நீக்குமரணத்தின் 'கிடுக்கி'ப் பிடியில் மதங்கள்
பதிலளிநீக்குஅருமையான தலைப்பு. சரியான தகவல்கள் கொண்ட பதிவு.
இந்தியா போன்ற நாடுகளை தவிர, வளர்ந்த நாடுகளில் மத நம்பிக்கை அற்றவர்களும், கடவுளை வணங்குவதை கைவிட்டவர்களும் மிக அதிகமாகி வருகிறார்கள்.
மிக நல்ல தகவல்.
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பர் வேகநரி.