எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

புதன், 20 ஆகஸ்ட், 2025

30 நாட்கள் சிறையிலிருந்தால் பதவி நீக்கம்! 30 நாட்கள் உள்நாட்டில் இல்லாமலிருந்தால்?!

‘குற்றவழக்கில் 30 நாட்கள் சிறையில் இருந்தால் பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் ஆகியோரின் பதவிகள் ரத்து’ -கூட்டத் தொடர் நாளை முடியும் நிலையில், இது தொடர்பான புதிய மசோதா இன்று மக்களவையில் தாக்கல்https://www.dinakaran.com/news/criminalcase_prison_primeminister_chiefminister_ministers_newbill/ 03:11 PM Aug 20, 2025.

முழு மனதுடன் வரவேற்கத்தக்க மசோதா இது.

தொடர்ந்து 30 நாட்கள் தங்களின் தாய்நாட்டில் தங்கிக் கடமையைச் செய்யாமல் வெளிநாடுகளில் சுற்றும் பிரதமர், முதலமைச்சர்கள், அமைச்சர்கள் ஆகியோரின் பதவிகளை ரத்து செய்ய ஒரு மசோதா கொண்டுவருவது மிக மிக மிக வவேற்கத்தக்கது!