அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

கடவுள் சிலைகளும் 'கம கம' 'குசு'வும்!!!

[கண்கள் எங்கே?!]

#கர்நாடகாவின், பெல்காம் மாவட்டத்தில் கோகக் எனும் ஊரில் சங்கரலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள சிவலிங்கத்தின் இரு கண்களும் நன்றாகத் திறந்திருப்பதாகப் பூசாரி தெரிவித்தார். இதையடுத்து, அந்தக் காட்சியைக் காணும் ஆர்வத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்தனர். இது தொடர்பான காட்சிகள் வலைதளங்களில் வைரலாகியுள்ளது. நெட்டிசன்கள் பலரும் கமென்ட்களைப் பதிவிட்டு வருகின்றனர்# -இது செய்தி[https://m.dinamalar.com/temple_detail.php?id=111170].

கோயில்களில் உள்ள சாமி சிலைகளின் கண்கள் திறந்திருப்பதாகவும், சாமிகள் பால் குடித்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வருவது வழக்கமாகிவிட்ட ஒன்று.

விழித்துப் பார்க்கும் எந்தவொரு சாமியும், கண் சிமிட்டியதாகவோ, வழிபட வந்த பக்தகோடிகளைப் பார்த்துக் கண்ணடித்ததாகவோ, புன்னகைத்ததாகவோ, வாய்விட்டுச் சிரித்ததாகவோ செய்தி ஏதும் வந்ததில்லை.

ஒரு சாமி கண் திறந்து பார்க்கும் என்றால், கண்மூடி உறங்குவதும் குறட்டை விடுவதும் சாத்தியம்தானே? சாமியின் குறட்டைச் சத்தத்தை எந்தவொரு பூசாரியும் கேட்டதாகத் தெரியவில்லை.

சாமி பால் குடிப்பதாகச் சொல்லுகிற பூசாரி, குடித்த பாலின் அளவு[ஒரு தம்ளரா, ஒரு லிட்டரா?] பற்றி ஏதும் கூறியதில்லை.

இதுவரை, பால் குடித்த சாமி எதுவும், பாலுக்குப் பதிலாக வேறு பானம்[தேனீர், காப்பி, மது வகைகள்] எதுவும் குடித்ததாகவோ, சைவ உணவுகள் அல்லது, அசைவ உணவுகள் உண்டதாகவோ வரலாறு இல்லை.

கண்ட கண்ட நொறுக்குத் தீனிகளைத் தின்று, வாயுத் தொல்லையால் அவதிப்பட்டு, 'குசுவு'[வாயு வெளியேறுதல்]கூடப் போட்டிருக்கலாம். குசுவிலிருந்து பரவும் 'கம கம' வாசனையைப் பூசாரிகள் நுகர்ந்து இன்புற்றது பற்றிய தகவல் வெளியானதில்லை. 

'சாமி பால் குடித்தது, கண் விழித்துப் பார்த்தது' என்று மட்டும் இந்தப் பூசாரிகள் அவ்வப்போது பொய்ச்செய்தி வெளியிடுவது ஏன்?

இவர்கள் பொய்யர்கள்; மக்கள்களை முட்டாள்கள் ஆக்கித் தங்களை மேன்மக்களாக உயர்த்திக்கொள்ள நினைப்பவர்கள்.

இவர்கள் கண்டிப்பாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

மூடநம்பிக்கைகளுக்கு உரம் சேர்க்கும் வகையில் இவர்கள் வழங்கும் செய்திகளை வெளியிடும் ஊடகக்காரர்களும்  தண்டிக்கப்பட வேண்டியவர்களே.

ஆட்சியாளர்கள் இது குறித்துச் சிந்தித்துத் தற்சார்பின்றி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது உடனடித் தேவையாகும். 

=================================================================================