சனி, 6 பிப்ரவரி, 2021

'பாம்புப் பிணையல்'...'படு படு' சுவாரசியத் தகவல்!!!

நல்ல பாம்புகளைப் பொருத்தவரை, ஆண்பாம்பு, தான் போகிற வழியில் பெண் பாம்பைச் சந்தித்தவுடன் அதற்கு மூடு ஏற்பட்டு, பெண்ணை ஓரமாகத் தள்ளிக்கொண்டு போய் செக்ஸ் வைத்துக்கொள்ள முடியும் என்கிற கதையே நடக்காது!

இரண்டு நல்லபாம்புகள் சுற்றிச் சுற்றி வந்து 'ஹிஸ்ஸ்ஸ்...' என்ற சீறலுடன் ஒன்றன் மீது ஒன்று பலமுறை பாயும். பிறகு, இரண்டு பாம்புகளும் ஒன்றையொன்று இறுக்கிப் பின்னிப் பிணைந்து சாய்ந்தாடியவாறு செங்குத்தாக நிலத்தில் நிற்கும். பார்ப்பதற்குப் 'பாலே டான்ஸ்' ஆடுவது போல இருக்கும்.

போலிருந்தாலும், இந்தக் 'கட்டிப் பிடிப்பும் புரளலும்' மணிக்கணக்கில், சில சமயம் நாள்  முழுவதும்கூடத் தொடரும். பலமுறை இரண்டும் நிலத்தில் விழுந்து விழுந்து எழும். கடைசியில் ஒரு பாம்பு சோர்வடைந்து, சோகமாகப் பின்வாங்கும்! (சோகம் என்பது உண்மை! குறுக்கே ஒரு எலி போனால்கூட, அதைப் பாய்ந்து பிடிக்காத அளவுக்குப் பாம்பு அப்செட் ஆகிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்!)

இதைப் பார்த்துவிட்டு ஆண்|பெண் பாம்பு ஜோடி இப்படியாக ஆரத் தழுவிப் பிணைத்துக்கொண்டு பல மணி நேரம் உடலுறவில் ஈடுபடுகிறது என்று பலர் நினைத்துக் கொள்கிறார்கள். அது தப்புக் கணக்கு!

இந்தப் பாம்புகளின் அருகில் சென்று பார்த்தால், ஒரு அதிர்ச்சி காத்திருக்கும்! அது, இந்தத் 'தழுவலில்' ஈடுபட்ட இரு பாம்புகளுமே ஆண்கள் என்பதுதான்!

இவை நிகழ்த்தியது மல்யுத்தம்! (விலங்கினங்களிலும் ஹோமோ செக்ஸ் முயற்சிகள் உண்டு என்பது தனித் தகவல்!)

இரண்டுமே ஆண் பாம்புகள்...சரி. இந்த மல்யுத்தம் எதற்கு? 

புதருக்குப் பின்னால், பலகணியிலிருந்து பார்க்கும் இளவரசியைப் போல, காம உணர்ச்சி பொங்கக் காத்திருக்கும் பெண் பாம்புக்காகத்தான்!

ஒரு போட்டியாளருடன் சண்டை போட்டு ஜெயிக்காமலெல்லாம் பெண்ணுடன் செக்ஸ் வைத்துக்கொள்வது என்பது பாம்பு இனத்தில் இல்லை.

நல்ல பாம்பு இப்படியென்றால், மற்ற ஒவ்வொரு பாம்பு வகைக்கும் ஒவ்வொரு விதமான போராட்டம் தவிர்க்க முடியாதது!

கார்ட்டர் பாம்பு என்று ஒரு வகை உண்டு. குறிப்பாக, வடஅமெரிக்காவிலும் தென்ஆப்பிரிக்காவிலும் காணப்படும்.

இந்தப் பாம்புகள் காடுகளில், பாதுகாப்பான மிகப்பெரிய பொந்துக்குள் வசிக்கும். ஒரு பொந்தில் குறைந்தபட்சம் பத்தாயிரம் பாம்புகள்.

வளைந்து நெளிவதைப் பார்க்கவே உடல் நடுங்கும்! (இண்டியானா ஜோன்ஸ்Õ திரைப்படத்தில் ஹாரிஸன் ஃபோர்டு, இப்படியொரு பாம்புப் பொந்தில் தொங்கவிடப்படும் காட்சி உண்டு!).

இளவேனிற்பருவம் வந்தால் போதும்... கார்ட்டர் பெண் பாம்புகள் உடலுறவுக்குத் தயாராகி, ஒவ்வொன்றாக வெளியே வரும்.

அவைகளுடன் செக்ஸ் வைத்துக் கொள்வதற்காக, பல்லாயிரக்கணக்கான ஆண்கள் சூழ்ந்துகொண்டு நடத்தும் போராட்டம் இருக்கிறதே...அடடா!

ஆயிரக்கணக்கில் பாம்புகள் உன்மத்தம் பிடித்தது போல வேட்கைச் சீறலுடன் சிலிர்த்தெழுந்து, வளைந்து நெளிந்து பாய்ந்து, செங்குத்தாக..எழும்பி நின்று, ஒன்றையொன்றை இடித்துப் பின்னால் தள்ளி, மற்ற பாம்புகளுக்கிடையே இண்டு இடுக்கிலெல்லாம் புகுந்து எப்படியாவது பெண் பாம்புகளுடன் உடலுறவு கொள்ளவேண்டி நிகழ்த்தும் அந்தக் கலாட்டாவைப் பார்க்கும்போது அந்த இடம் ஒருபோர்க்களம் போல் காட்சியளிக்கும்!

ஒரு பெண்ணுக்கு நூறு ஆண்கள் என்கிற விகிதத்தில் நடக்கும் இந்தக் களேபரமான யுத்தத்தில், பலசாலிகளான ஆண்கள் மட்டுமே ஜெயித்து, பெண்களுடன் உடலுறவு கொள்ளும். செக்ஸ் முடிந்த கையோடு, ஆண் நகர்ந்து சென்றுவிட்டால், இன்னொரு ஆண் அந்தப் பெண்ணைப் புணர்ந்து விடக்கூடும் அல்லவா?

இதைத் தடுக்க, ஒவ்வொரு ஆணும் 'காமக் களேபரம்' முடிந்தவுடன், தன் உறுப்பிலிருந்து கோந்து போன்ற திரவத்தைப் பீய்ச்சி, பெண்ணின் உறுப்பைச் சீல் செய்துவிடும்!

அந்தத் திரவம் உடனே கெட்டிப்பட்டுவிடுவதால், இன்னொரு ஆண் அந்தப் பெண்ணுடன் உறவுகொள்ள முடியாது! அதாவது புணர்ச்சி செய்த ஆண், மற்ற ஆண்களைத் தடுப்பதற்காகவே ஒரு கதவை உடனடியாகத் தயாரித்து மூடிவிடுகிறது!

இதன்மூலம், பெண் பின்னர் முட்டைகள் போட்டாலோ, குட்டிகளைப் பிரசவித்தாலோ (பாம்புகளில் இரு வகையும் உண்டு.) அவை தனக்குப் பிறந்த குழந்தைகளாக இருக்க வேண்டும் என்பதை ஆண் பாம்பு நிச்சயப்படுத்திக் கொள்கிறது! 

இதன் மூலம் நாம் அறியும் அநீதி:

'காமம் பொல்லாதது! காம உணர்வுடன் உயிர்களைப் படைத்த கடவுள் மிக மிக மிகப் பொல்லாதவன்!!

=================================================================================

https://groups.google.com/g/panbudan/c/PbZ3AFan2Mc