வியாழன், 4 பிப்ரவரி, 2021

எத்தனை பெரிய மதங்கள்! எத்தனை எத்தனை பிரிவுகள்!!

இந்து மதத்தில் மட்டுமே பல பிரிவுகள் உள்ளன. கிறித்தவம், இஸ்லாம் ஆகியவற்றில் பிரிவுகளே இல்லை'  என்னும் தவறான நம்பிக்கையை,  ஊடகங்களும் திரைப்படங்களும்  தொடர்ந்து மக்களிடையே பரப்பிவருகின்றன. அது எத்தனை பெரிய தவறு என்பதை இப்பதிவு மிகத் தெளிவாகப் புரியவைக்கும்.

வாசியுங்கள்.

கிறிஸ்தவ மதப் பிரிவுகள்:

ஒரே கிறிஸ்து ஒரே பைபிள் ஒரே மதம் என்று சொல்ல‍ப்படும் கிறிஸ்துவ மதத்தில்.....

லத்தீன் கத்தோலிக்கர்கள், சிரியன் கத்தோலிக்க சர்ச்சுக்குள் நிழைய மாட்டார்கள்.

இந்த இருபிரிவினரும் மார்தோமா சர்ச்சுக்குள் நுழைவதில்லை.

இந்த மூன்று பிரிவினரும் பெந்தகோஸ்ட் சர்ச்சுக்குச் செல்வதில்லை.

இந்நான்கு பிரிவினரும் (Salvation Army Church) சால்வேஷன் ஆர்மி சர்ச்சுக்குள் நுழையமாட்டார்கள்.

இந்த ஐந்து பிரிவினரும் சென்வென்த் டே அட்வென்டிஸ்ட் சர்ச்சுக்குச் சென்று வழிபடுவதில்லை.

இந்த ஆறு பிரிவினரும் (Orthodox Church.) ஆர்தோடாக்ஸ் சர்ச்சுக்குச் செல்லமாட்டார்கள்.

இந்த ஏழு பிரிவினருக்கும் (Jacobite church) ஜேகோபைட் சர்ச்சுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.

இப்படி, கிறிஸ்தவர்களில் 146 பிரிவினர்கள் கேரளாவில் மட்டுமே இருக்கிறார்கள்.

தமிழகத்தை எடுத்துக்கொண்டால் நாடார் கிறிஸ்தவர்கள், தலித் கிறிஸ்தவர்கள், வன்னியர் கிறிஸ்தவர்கள் என்று மதம் மாறிய பிரிவினர்கள் எல்லோரும் அவர்களது ஜாதியைக் கிறிஸ்தவ ஜாதியாக மாற்றி ஜாதிக் கிறிஸ்தவர்களாகவே வாழ்கிறார்கள். இப்படி மதம் மாறிய கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பப் பிள்ளைகளுக்கு வரன் பார்க்கும்போது சொந்தப் பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவர்களாகவே பார்ப்பதும் நடக்கிறது.

அவ்வளவு ஏன், மாதாவைக் கும்பிடும் கிறிஸ்தவர்கள் ஏசுவை ஏற்றுக்கொள்வதில்லை. ஏசுவைக் கும்பிடும் கிறிஸ்தவர்கள் மாதா வைக் கும்பிடுவதில்லை. இரண்டுமே கிறிஸ்தவத்தின் கடவுள்கள் என்றாலும் இவ்விரண்டு பிரிவினரும் ஏசுவையும் மாதாவையும் பரஸ்பரம் சாத்தான்களை ஏசுவதைப் போல ஏசுவார்கள்.

கத்துவம் என்ற பெயரைக் கொண்டு, ஒரே கடவுள் ஒரே மதம் என்று கூறும் இஸ்லாத்தில்.....

Among Muslims, Shia and Sunni kill each other in all the Muslim countries.

ஷியா முஸ்லீம் சன்னி முஸ்லீம்களின் மசூதிக்குச் செல்லவதில்லை

இந்த இரு பிரிவினரும் அஹமதியா மசூதிக்குச் செல்லமாட்டா ர்கள்.

இந்த மூன்று பிரிவினரும் சுஃபி மசூதிக்குள் நுழைவதில்லை.

இந்த நான்கு பிரிவினரும் முஜாஹிதீன் மசூதிக்குச் செல்லமாட்டா ர்கள்.

இப்படி முஸ்லீம்களிலேயே 13 பிரிவுகள் இருக்கின்றன.

இது மட்டுமல்ல, முஸ்லீம்களில் வேறுபல பிரிவினரும் இருக்கிறார்கள். (ஆங்கிலத்தில்)

1. Ansari

2. Arain

3. Awan

4. Bohra

5. Dawoodi Bohra

6. Dekkani

7. Dudekula

8. Ehle-Hadith

9. Hanabali

10. Hanafi

11.I smaili

12. Khoja

13. Labbai

14. Lebbai

15. Lodhi

16. Malik

17. Mapila

18. Maraicar

19. Memon

20. Mugal

21. Mughal

22. Pathan

23. Quresh

24. Qureshi

25. Rajput

26. Rowther

27. Salafi

28. Shafi

29. Sheikh

30. Shia

31. Siddiqui

32. Sunni Hanafi

33. Sunni Malik

34. Sunni Shafi

35. Syed

அனுமார்வால் போன்று நீண்டிருக்கும் இத்தனை ஜாதிகளைக் கொண்ட முஸ்லீம்கள் வேறு ஜாதிகளில் பெண் கொடுக்கவோ எடுக்கவோ மாட்டார்கள். அதிலும் மரைக்காயர் மற்றும் லெப்பைகள் போன்றோர் அரபு முஸ்லீம்கள் என்று கூறிக்கொள்வர். இவர்கள் மற்றவர்களுக்குப் பெண் கொடுக்க மாட்டார்கள். ஜாதிகளும் அதில் மேல் கீழ் என்னும் பிரிவுகளும் முஸ்லீம்களிலும் உண்டு. பட்டாணி முஸ்லீம் பெண்மணியை நாசுவன் ஜாதி ஆணுக்குத் திருமணம் செய்து வைக்கமாட்டார்கள்.

ஆனால் இவர்கள் ஒரே இறைவன், ஒரே மதம், ஒன்றான மக்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள். 

ஆக, மதவாதிகள் சொல்வதையெல்லாம் நம்புவதற்கென்று பெரும் எண்ணிக்கையிலான அப்பாவி மக்கள் எப்போதும் இருந்துகொண்டே இருப்பது மிகப் பெரிய சோகம்!

=================================================================================

நன்றி: https://www.vidhai2virutcham.com/ [June 27, 2013 by V2V Admin]