செவ்வாய், 2 பிப்ரவரி, 2021

உடலுறவுக்குப் பின்.....

உடலுறவு கொள்வதற்கு முன்பு, வயிறு முட்டச் சாப்பிடுவது, மது அருந்துவது, கசப்பான அனுபவங்களை அசைபோடுவது அல்லது துணையுடன் அவற்றைப் பகிர்ந்துகொள்வது போன்ற செயல்கள் தவிர்க்கப்பட வேண்டியவை என்பார்கள்.

இதைப் போலவே உடலுறவுக்குப் பின்னர் செய்யக் கூடாதனவற்றுக்கான ஒரு பட்டியல்:

*புணர்ச்சி முடிந்தவுடன் உறங்குதல்.

*புரண்டு படுத்து அல்லது, விலகிச் சென்று பிறிதொரு படுக்கையில் படுத்து உறங்குதல்.

*குளித்தல்.

*உணவுண்ணுதல்.

*அவசரகதியில் ஏதேனுமொரு பணியில் ஈடுபடுதல்.

மேற்கண்ட செயல்களைத் தவிர்ப்பது மிக மிக அவசியம் என்கிறார்கள் உளவியலாளர்கள். காரணம்.....

உடலுறவு முடிந்த பிறகுதான் தன் துணைவனின் துணையைப் பெண்கள் அதிகம் விரும்புகிறார்களாம். உடனடிப் பிரிவு மனத்தளவில் அவர்களுக்குப் பெரும் பாதிப்பை உண்டுபண்ணுமாம். எனவே.....

'அந்த'ச் சுக அனுபவத்திற்குப் பிறகு, குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது, தன்னவள் மிகவும் இணக்கமாக நடந்துகொண்டதைப் பாராட்டுவது, முத்தங்கள் தந்து கொஞ்சுவது, அனுபவித்த இன்பசுகங்களை நினைவுகூர்ந்து/பகிர்ந்து மனம் களிப்பது என்றிப்படியெல்லாம் செய்தால் பெண்ணின் மனதில் மகிழ்ச்சி நிரம்பி வழியும்; துணைவன் மீது கொண்ட அன்பு பல மடங்காகப் பெருகும் என்கிறார்கள்.  

சங்ககாலத்தில், ஓர் ஆணும் பெண்ணும் தனிமையில் சந்தித்துப் புணர்ந்து இன்புறுதலை, 'இயற்கைப்புணர்ச்சி' என்றார்கள். அதில், கலந்து மகிழ்தல், அழகினைப் பாராட்டல், ஏற்ற அணிகளை அணிதல் என்னும் உட்பிரிவுகள் உள்ளன.

இவற்றின் மூலம், பெண்ணுடன் கலந்து இன்புற்ற ஆண்மகன், புணர்ச்சியின்போது இடம்பெயர்ந்த அவளின் ஆடைகளைத் திருத்துவதோடு, நீக்கப்பட்ட அணிகலன்களை அவற்றிற்கு உரிய இடங்களில் அணிவித்து, அவனைப் பிரிய நேர்வது குறித்து வருந்தும் அவளுக்கு உரிய முறையில் தேறுதல் சொல்லி அனுப்பிவைப்பான் என்பதை அறிகிறோம்.

தங்களின் வருகைக்கும் பதிவை வாசித்து மகிழ்ந்தமைக்கும் மிக்க  நன்றி!

=================================================================================