எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

புதன், 17 செப்டம்பர், 2025

இரண்டு பெரிய மதங்கள் இணைந்து பரப்பிய இமாலயப் பொய்!!!

//யூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் ஆகியோர் புனிதமாகக் கருதும் சினாய் மலையில் ஒரு பெரிய சுற்றுலாத் திட்டம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் மொழியில் 'ஜபல் மூசா' என அழைக்கப்படும் இந்த மலையில், மோசேக்குப் பத்துக் கட்டளைகள் வழங்கப்பட்டதாக நம்பப்படுகிறது. பைபிள் & குர்ஆன் கூற்றுப்படி, எரியும் புதரில் இருந்து மோசேவிடம் கடவுள் பேசிய இடம் இதுதான் என்று பலர் கருதுகின்றனர்//[https://www.bbc.com/tamil/articles/c179q4dxy7jo]


கட்டளைகள் பத்தோ பத்து நூறோ அவையல்ல நம் அடி மனதை உறுத்துவது; எரியும் புதரிலிருந்து மோசேவிடம் கடவுள் பேசினார் என்கிறார்களே அதுதான்.
எரிந்துகொண்டிருக்கிற ஒரு புதரைக் கடவுள் ஏன் தேர்ந்தெடுத்தார்?

கடவுளே நெருப்பு வடிவில் இருந்திருப்பாரோ?

புதருக்குள் மறைந்திராமல், மோசேவின் எதிரில் நெருப்பு வடிவிலேயே காட்சி தந்து பேசியிருக்கலாமே?[வேறு வேறு உருவங்களிலும் அதைச் செய்திருக்கலாம்] அனல் பட்டு மோசே கருகிவிடுவார் என்று நினைத்திருப்பாரோ? வேறு காரணங்களும் இருக்குமோ?

எது எப்படியோ, இம்மாதிரியான தகவல்கள் பக்திமான்களின் கடவுள்[சர்வ மதக் கடவுள்கள்] பக்தியை அதிகரிப்பதற்கு மாறாக, கடவுள்கள் குறித்த மூடநம்பிக்கைககளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்பதுதான் அடியேனின் தீராத கவலை[ஹி... ஹி... ஹி!!!].

என் கவலை எப்போது தீரும்?