திங்கள், 6 பிப்ரவரி, 2023

காதலர் தினமாம்! கொண்டாட்டமாம்!! காண்டம் இலவசமாம்!!! சீ... தூ...

‘காதலர் தினம்’[valentine-s-day] பிப்ரவரி 14 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. காதல் கொண்டாட்டங்கள் ஒரு வாரத்திற்கு முன்பே, பிப்ரவரி 7 அன்று ரோஜா தினத்துடன் தொடங்குகின்றன.

இதைக் கருத்தில் கொண்டு, தாய்லாந்து அரசு உலகளாவிய சுகாதார அட்டைதாரர்களுக்கு 95 மில்லியன் இலவச ஆணுறைகளை வழங்கவிருக்கிறது’ -இது செய்தி.

காதல் என்பது இரு மனங்களின்[ஆண்&பெண்] கலப்பு; சுயநலம் கலவாதது. அதனால்தான் அதைப் புனிதமானது என்கிறார்கள்; சாகாவரம் பெற்றது என்று போற்றுகிறார்கள். காதலர் தினத்தைக் கொண்டாடவிருக்கும் புனிதர்களான இவர்களுக்கு எதற்கு ஆணுறை[காண்டம்]?

காமம் என்பது ஆண்&பெண் இணைப்பில் தோன்றும் சுகானுபவம். காமத்தில் ஆபாசத்தின் கலப்பு விகிதம் மிக அதிகம். அதனால், காமம் கொள்பவர்கள் ‘காமுகர்கள்’ எனப்படுகிறார்கள்.

அந்தக் காமுகர்களைத்தான் காதலர்கள் என்கிறது உலகம். தாய்லாந்து அரசு.  இவர்கள் மூலம் சிபிலிஸ், கருப்பைப் புற்றுநோய், வாய்ப் புற்றுநோய், கோனோரியா, கிளமிடியா, எயிட்ஸ் போன்ற நோய்கள் பரவுவதைத் தடுப்பதற்குத்தான் அது இவர்களுக்கு இலவசமாகக் காண்டம் வழங்குகிறது.

எனவே, கொண்டாடப்படவிருக்கும் காதலர் தினத்தைக் ‘காமுகர் தினம்’ என்பதே சரி.

தாய்லாந்து அரசு இலவசக் காண்டம் வழங்குவது காதலர்களுக்கு அல்ல; காமுகர்களுக்கு.

அந்தக் காமுகர்கள், காண்டம் பயன்படுத்தினால் முழுமையான இன்பத்தைப் பெறுவது சாத்தியப்படாது என்று புலம்பவும் செய்வார்கள்.

ஆகவே, காண்டம் வழங்குவதைத் தவிர்த்து, கருத்தடை மாத்திரைகளையே அவர்களுக்கு வழங்கலாம்.

இங்கே நம் மனதில் எழும் மிகப் பெரிய சந்தேகம் என்னவென்றால், காம சுகம் துய்க்கிற காமுகர்களுக்குக் காண்டம் வாங்கக்கூடவா துப்பில்லை.

தூ... காதலர்களாம்! அவர்களுக்காக ஒரு தினமாம்! அதைக் கொண்டாடுவதற்கு இலவச ஆணுறையாம்! கர்மம்!! கருமாந்தரம்!!!

==============================================================================

https://www.msn.com/en-in/health/health-news/valentine-s-day-this-country-is-distributing-95-million-free-condoms/ar-AA1767GH?ocid=msedgdhp&pc=U531&cvid=ab623e6748bf4972bfcbfbce43d79f58