செவ்வாய், 7 பிப்ரவரி, 2023

வையகம் புகழ் வைஜயந்திமாலா[நடிகை]!... அன்றும் இன்றும்.


அன்று அவள் கட்டழகுக் கன்னியாக இருந்தாள்.

அவையில் அவள் சுழன்று சுழன்று ஆடிய கோலம் அங்கிருந்த அத்தனை பேர் மனங்களிலும் ஆசைத் தீயை மூட்டியது.

அப்போது அவள் தளதள மேனிக்குச் சொந்தக்காரி. ஒட்டுமொத்த வாலிபத்தையும் குத்தகைக்கு எடுத்திருந்தாள்.

அவள் சிரிப்பு சோமபானம் சொரிந்தது. புன்னகை வானவர்தம் இன்பபுரிக்கு இட்டுச் சென்றது.

அவளுக்குப் கோவைப்பழ உதடுகள். கண்ணாடிக் கன்னங்கள். கண்டு மயங்காதவரே இல்லை.

அவள் ஆடிய ஆட்டம் ஞானிகளின் மனங்களிலும் காமாக்கினியைப் பற்றவைக்க வல்லது.

அவள் தாளத்துக்கு ஏற்பவே ஆடினாள். அது பலரது தேகத்தில் அடங்காத தாபத்தை விதைத்தது.

அவள்தான் வைஜயந்திமாலா.

அவருக்கு[வைஜயந்திமாலா]  இப்போது 86 வயது.

இந்தத் தள்ளாத வயது அவரை இருட்டறையில் முடக்கிவிடவில்லை.

சில வாரங்களுக்கு முன்னர் மேடை ஏறிப் ‘பரதம்’ ஆடினார்.

ஆட்டத்தில் துள்ளல் இல்லை; துவளாத மனம் தெரிந்தது; தன்னம்பிக்கை மிளிர்ந்தது.

கண்களில் காந்தம் இல்லை; சாந்தம் தவழ்ந்தது.

அன்று பரதம் ஆடினார். இன்றும் அதே ஆட்டம்தான். 

அது ஆனந்தத் தாண்டவம். இது அலட்டல் இல்லாத நளின நடனம்.

அன்று அவரின் ஆட்டம் மயக்கத்தில் ஆழ்த்தியது. இன்றைய ஆட்டம் அவரின் மன உறுதியை எண்ணி வியக்க வைத்தது.

அன்று புகழின் உச்சியைத் தொட்டார் அவர். இன்றுவரை அந்தப் புகழுக்குப் பங்கம் ஏதுமில்லை.

அவருக்கு வீழ்ச்சி என்பது எப்போதும் இல்லை. காரணம், அவர் அரியணை போட்டு அமர்ந்திருப்பது அவரின் உண்மை அன்பர்களான நம் உள்ளங்களில்!

இது வைஜயந்தியின் இன்றைய நாட்டியம்: