எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

சனி, 25 ஜனவரி, 2025

சீறிப் பாயும் சிங்கம் சீமான்! சிதறி ஓடும் எதிரிகள்!!

பெரியாரைக் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியதிலிருந்து இந்நாள் தேர்தல்[ஈரோடு] பரப்புரைவரை, செந்தமிழன் சீமான் சீறும் சிங்கமெனக் கர்ஜிக்கும்போதெல்லாம், அவரின் ஆக்ரோசமான அங்க அசைவுகள் காண்போரைக்[அடியேன் உட்பட. ஹி... ஹி... ஹி!!!] கதிகலங்க வைக்கின்றன.

அவை அவரின் தம்பிகளை வீறுகொண்டு எழுந்து மாற்றாருடன் சமர் புரியத் தூண்டுவனவாகவும், அரசியல் எதிரிகளை அலறியடித்துப் புறமுதுகிட்டு ஓடச் செய்வனவாகவும் உள்ளன.

எடுத்துக்காட்டாகக் கொஞ்சம் படங்கள்:

இன்றையத் தினத்தில் எதிரணியினருக்கு நாம் செய்யும் எச்சரிக்கை:

தேர்தலில்[ஈரோடு] சிறுத்தை சீமானை எதிர்த்துப் போட்டியிட்டு நீங்கள் வெற்றிபெற நினைத்தால் அது வெறும் பகற்கனவாகவே முடியும்.
 
அவரின் வெற்றி 100% உறுதி.

2026 தமிழ்நாடு சட்டமன்றைத் தேர்தலிலும் வெற்றிக்கனி பறித்து ஆட்சிபீடத்தைக் கைப்பற்றுவார்.

எனவே, அவர் மீதான பகை உணர்வை முற்றிலுமாய்த் துடைத்தெறிந்து, 2026இல் முதல்வர் சீமானை வாழ்த்திட உங்கள் மனங்களைப் பக்குவப்படுத்துவீர்!

வாழ்க தமிழ்நாடு முதல்வர்[2026] சிங்கத் தமிழன் சீமான்!!