வெள்ளி, 24 ஜனவரி, 2025

‘நல்ல நேரம்’ பார்க்கும் நல்லவர்களுக்கு ஒரு கேள்வி!

எந்தவொரு செயலைத் தொடங்குவதற்கும் ‘நல்ல நேரம்’ பார்ப்பவர் நீங்கள் என்றால், கீழ்க்காணும்  ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் நன்கு சிந்தித்துப் பதில் சொல்லுங்கள்.

ஒவ்வொரு நாளிலும், நல்ல நேரங்களைத் தொடர்ந்து நல்லவை அல்லாத, அல்லது ‘கெட்ட நேரம்’களும்[ராகு காலம் 10.30 - 12.00; எமகண்டம்: 03.00 - 04.30 என்றிப்படி] இடம்பெறுவது நீங்கள் அறிந்ததே.

ஒரு செயலை நல்ல நேரத்தில் தொடங்கிச் செய்துகொண்டிருக்கிற நீங்கள், அடுத்தடுத்து வரும் ‘கெட்ட’ நேரங்களில் உங்களின் செயல்பாடுகளை நிறுத்தி வைப்பதில்லைதானே?(உதாரணங்கள்: 1. மாப்பிள்ளை பெண்ணுக்குத் தாலி கட்டுவது காலையில் ஒரு நல்ல நேரத்தில் நிகழ்ந்தாலும் மற்ற நிகழ்வுகள் நாள் முழுக்கத் தொடர்ந்து நடக்கின்றன. 2. சாந்திமுகூர்த்தத்தில், நல்ல நேரம் பார்த்து அறைக்குள் அனுப்பப்படும் புது மாப்பிள்ளையும் பெண்ணும் நல்ல நேரம் முடிந்த பிறகும் உடலுறவை நீடிக்கக்கூடும்). 

“ஆம்” என்றால்....

கெட்ட நேரங்கள் உங்களுக்குத் தீங்கு விளைவிக்கும், அல்லது உங்களின் செயலை நினைத்தபடி செய்துமுடிப்பதைத் தடுக்கும் அல்லவா?

‘தொடங்குவதற்கு மட்டும் நல்ல நேரம். அப்புறம் அது தேவையில்லை’..... என்றிப்படிச் சொல்கிறவர்களா[ஜோதிடர்கள்], அவர்கள் சொல்வதை நம்புகிறவர்களா, ஆகச் சிறந்த முட்டாள்கள் எவரெல்லாம்?!