சனி, 10 டிசம்பர், 2022

ஆபாச மனிதர்கள்!!!

ஆபாசப் படங்களைப் பார்ப்பவர்களை மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள் மருத்துவத்துறை வல்லுனர்கள்.

 முதல் வகையினர்:


ஒரு வாரத்தில் சுமார் கால் மணி நேரம் முன்பின்னாக ஆபாசப் படங்களைப் பார்ப்பவர்கள்.

 

இதனால் பெரிய அளவில் உடல் நலமோ மன நலமோ பாதிக்கப்படுவதில்லை என்கிறார்கள்.

 

நம் மக்களில் சுமார் 75%[மீசை முளைக்காத சிறுவர் முதல் ஆசை நரைக்காத கிழங்கள்வரை] பேர் இந்த வகையைச் சேர்ந்தவர்கள் என ஆய்வுகள் கூறுகின்றன. 

 

 

இரண்டாம் வகையினர்:

 

இவர்கள் அடிக்கடி உணர்ச்சிவசப்படுபவர்கள்.

 

குறைந்த நேரம் ஆபாசப் படங்களைப் பார்த்தாலும், அவற்றுடன் ஒன்றிப்போவதால் அவற்றின் பாதிப்பிலிருந்து இவர்களால் எளிதில் விடுபட முடிவதில்லை. 

 

மீண்டும் மீண்டும் பார்க்கும் எண்ணம் இவர்களுக்கு இருக்கும். இது அன்றாடப் பணிகளில் சுணக்கம் ஏற்பட வழிவகுக்கும்.

 

சமுதாயத்தில் ஏறக்குறைய 13% பேர் இவ்வகையினர் என்று ஆய்வுகள் கூறுகின்றன.



மூன்றாம் வகையினர்:

 

இவர்களின் எண்ணிக்கை 11%

ஆக இருத்தல் சாத்தியம்.

 

இவர்கள் தனிமை விரும்பிகள்; அடிக்கடி படபடப்பு, கோபம், எரிச்சல், போன்றவற்றிற்கு உள்ளாகிறவர்கள்.

 

ஆபாசப் படம் மிக அதிகமாகப்

பார்ப்பதால், இவர்களுக்கு

உடல்நலப் பாதிப்பு

களும் மனநலப் பாதிப்புகளும்

ஏற்பட வாய்ப்புள்ளது.

 

இம்மாதிரிப் பழக்கம் உள்ள

ஆண்களுக்கு[பெண்களுக்கும்

தான்] மூளையில்

பிரச்னைகள் ஏற்படுகின்ற

னவாம்.

 

நினைவுத் திறன் பாதிப்பு, தூக்கமின்மை, நுண்ணறிவுக் குறைபாடு, கவனக்குறைவு போன்ற பாதிப்புகள் உண்டாவதால், இவர்கள் தவறாமல் மருத்துவரை அணுகிச் சிகிச்சை பெறுதல் அவசியம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

                                           *   *   *   *   *

*****இம்மூவகை ஆபாச[ஆபாசப் படம் பார்ப்பவர்கள்] மனிதர்களில்  முதல் பிரிவைச் சார்ந்தவர்களில் எவரும், “ஆகா... நான் புத்திசாலி” என்று பெருமைப்பட்டுக்கொள்வது தவறு. அவர் எப்போது வேண்டுமானாலும் மற்ற இரண்டு பிரிவிற்கும் தாவிவிட வாய்ப்புள்ளது. ஆகவே, அத்தகையோருக்கு அடியேன் வழங்கும் ஆலோசனை என்னவென்றால்.....


“ஆபாசப்படம் பார்க்காதீர். பார்த்தே தீரவேண்டும் என்று ஆசை மனம் அடம்பிடிக்குமேயானால், உங்களுக்குத் தெரிந்து ஆபாசப் படங்கள் பார்த்துப் பார்த்துப் பார்த்துக் கெட்டுச் சீரழிந்தவர் எவரேனும் இருந்தால், அவர் நினைவாக அரைமணி நேரமாவது ‘தியானம்’ செய்யுங்கள்”


ஹி... ஹி... ஹி!!!

=========================================================================== 

https://www.bbc.com/tamil/science-59731533